வெள்ளி, அக்டோபர் 21

பூமியின் வட்டப்பாதையில் சூரியனை சுற்றும் முதல் ட்ரோஜன் கிரகம் கண்டுபிடிப்பு!!!

பூமியின் வட்டப்பாதையில் சூரியனை சுற்றும் முதல் ட்ரோஜன் கிரகத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம் கண்டுபிடித்து உள்ளது.
பூமிக்கு இணையாக ஒரே வட்டப்பாதையில் அருகே அமைந்து சூரியனை சுற்றும் கிரகத்திற்கு ட்ரோஜன் என்று பெயர். பூமியைச் சுற்றி நிறைய ட்ரோஜன்கள் இருக்கலாம்.
அவை மிகச்சிறியதாக இருப்பதாலும், பூமியின் கோளத்தில் இருந்து கணக்கிடும் போது ட்ரோஜன் கிரகம் சூரியனுக்கு அருகாமையில் உள்ளன. எனவே அவற்றை காண்பதில் மிகுந்த சிரமம் உள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த சிறிய கிரகங்கள் பகல் நேர வெளிச்சத்திலேயே மூழ்கி கிடக்கின்றன. எனவே அதனை பார்ப்பதற்கு சிரமமாக உள்ளது என கனடா அதபாஸ்கா பல்கலைக்கழக ஆய்வாளர் கானர் கூறுகிறார்.
கானர்சும், இவரது குழுவினரும் நியோ-வைஸ் புள்ளி விவரங்களை வைத்து பூமி வட்டப்பாதையில் உள்ள ட்ரோஜன்களை பற்றி ஆய்வு செய்தனர்.
நியோ என்பது பூமிக்கு அருகே உள்ள பொருள் என்பதாகும். நியோ-வைஸ் திட்டத்தில் மிகச்சிறிய 1 லட்சத்து 55 ஆயிரம் கிரகங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. செவ்வாய் மற்றும் வியாழன் கிரகம் இடையே இவை ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

சனி கிரகத்தில் தண்ணீர் உள்ளது: விஞ்ஞானிகள் தகவல்!!!!!

சனி கிரகத்தில் தண்ணீர் உள்ளதா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஜேர்மனியைச் சேர்ந்த வானியல் விஞ்ஞானிகள் பால் ஹார்டாக் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சனி கிரகத்தில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்தனர். சனி கிரகத்தை சுற்றி பல சந்திரன்கள் உள்ளன. அவற்றில் அக்கிரகத்தின் மேல் பகுதியில் ஆறாவது மிகப்பெரிய சந்திரன் உள்ளது. அது முழுவதும் ஐஸ் கட்டினால் மூடப்பட்டுள்ளது.
இதனால் சனிகிரகத்தில் மழை பெய்து அதன் மூலம் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. மேலும் அங்கு ஆவி நிலையில் தண்ணீர் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இவை சனி கிரகத்தை சுற்றி வட்டவடிவில் உள்ளது. இது அந்த கிரகத்தின் சுற்றளவை விட 10 மடங்கு பெரியதாக உள்ளது. இதனால் இங்கு தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பாலாடைக்கட்டி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்: ஆய்வில் தகவல்!!!

பெரும்பாலானவர்கள் தங்கள் உணவில் பாலாடை கட்டிகளை பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் சிறுநீர் பையில் புற்றுநோய் ஆபத்து ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் இது குறித்து ஆராய்ச்சியை மேற்கொண்டனர். சிறுநீர் பை புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 200 பேரிடமும், புற்று நோய் பாதிக்காத 386 பேரிடமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவர்களில் தினமும் 53 கிராம் பாலாடை கட்டியை உணவில் சேர்த்து கொள்பவர்களுக்கு சிறுநீர் பை புற்றுநோய் பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் 53 கிராமுக்கும் அதிகமான சொக்லேட் சாப்பிட்டு வந்தனர்.
அதில் சேர்க்கப்பட்டிருந்த பாலாடை கட்டியால் இது உண்டானது தெரியவந்தது. அதே வேளையில் அதிக அளவு ஆலிவ் ஆயில் சேர்ப்பவர்களுக்கு பலவித நோய் பாதிப்பு ஏற்படும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

14 விதமான மூக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது!!!

இஸ்ரேலில் உள்ள பென் குரியன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆப்ரகாம் தமிர் என்பவர் தனது மாணவர்கள் துணையுடன் மனித மூக்குகள் குறித்த ஆராய்ச்சியில் இறங்கினார்.
மனிதர்களின் முக்கிய உறுப்புகளில் மூக்கும் ஒன்று. முகத்துக்கு அழகை சேர்ப்பது மூக்கு என்றால் அது மிகையாகாது. மனிதர்களுக்கு எத்தனை வகை மூக்குகள் உள்ளன என்பதை கண்டறியவே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆராய்ச்சியில் மனிதர்களுக்கு 14 விதமான மூக்குகள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது. பிறைவடிவிலான மெல்லிய மூக்கு, சதைப் பிடிப்பு மூக்கு, உருண்டை மூக்கு, ரோமன் மூக்கு என மொத்தம் 14 விதமான மூக்குகள் பட்டியலிடப்பட்டு உள்ளது.
சதைப் பிடிப்பிடிப்புள்ள மூக்குகள் ஆண்களிடம் தான் அதிகமாக காணப்படுகின்றன. இந்த மூக்குக்கு உதாரணம் கூற வேண்டுமானால், இளவரசர் பிலிப்பை சொல்லாம். நடிகர் டாம் குரூஸிடம் “ரோமன்” மூக்கு அமைந்துள்ளது.
மூக்கு விஷயம் சாதாரணமானது அல்ல, அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வுகளை வெளிப்படுத்துவதாக பேராசிரியர் ஆப்ரகாம் தபிர் கூறுகிறார். எந்த வகையான மூக்கை விரும்புகிறீர்கள் என்று பொதுமக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் லேசாக விளைந்த பிறை வடிவ மூக்கை விரும்புவதாக 13 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தள்ளனர். நீண்ட மூக்கை பெரும்பாலானோர் விரும்பவில்லை, தடிமனான மூக்குக்கு 5 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தள்ளனர்

முதன் முறையாக சூரியனை சுற்றி வந்த நெப்டியூன்!!!!!!!!

இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது முதல் இப்போது தான் சூரியனை முழுமையாக சுற்றி முடித்துள்ளது. அதாவது சூரியனை இந்த கிரகம் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் 165 ஆண்டுகளாகும்.
18ம் நூற்றாண்டில் யுரேனஸ் தான் நமது சூரிய குடும்பத்தின் கடைசி கிரகமாகக் கருதப்பட்டது. ஆனால் யுரேனஸின் சுற்றுப் பாதையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததே இதற்கு காரணமாகும். இதையடுத்து யுரேனசுக்கு அப்பாலும் கிரகங்கள் இருக்கின்றனவா என்ற ஆராய்ச்சிகள் தொடங்கின.
இந்நிலையில் பிரிட்டிஷ் வானியல் ஆய்வாளரான வில்லியம் ஹெர்செல் மற்றும் அவரது சகோதரி கரோலின் ஆகியோர் 1781ம் ஆண்டு யுரேனஸ் என்ற கிரகம் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால் அதை அவர்கள் பார்க்கவில்லை.
நெப்டியூன் இருக்கும் இடத்தை மிகச் சரியாக கணித்தவர்கள், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாட்டு கணிதவியல்-வானியல் ஆய்வாளர்களான லெ வெர்ரியர் மற்றும் ஜான் கெளச் ஆடம்ஸ் ஆகியோர் தான். இவர்களும் யுரேனஸை பார்க்கவில்லை.
இந்நிலையில் லெ வெர்ரியர் தந்த தகவலின் பேரில் 1846ம் ஆண்டு ஜேர்மனியின் வானியல் ஆய்வாளரான ஜோஹன் கல்லே இந்த கிரகத்தை தொலைநோக்கி மூலம் முதன் முதலாக அடையாளம் கண்டார்.
இவருக்கு முன்பே இத்தாலியின் பிரபலமான வானியல் ஆய்வாளரான கலிலியோ கலிலி 1612ம் ஆண்டு டிசம்பரிலேயே இந்த கிரகத்தை தொலைநோக்கியில் பார்த்தாலும் அதை நட்சத்திரம் என நினைத்து விட்டு விட்டார். ஆனால் அவரது நோட்ஸ்களில் உள்ள தகவல்களின்படி அவர் பார்த்தது நட்சத்திரம் இல்லை நெப்டியூன் தான் என பின்னாளில் தெரியவந்தது.
இதனால் இந்த கிரகம் அதிகாரப்பூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டது 1846ம் ஆண்டு தான் என்றாகிவிட்டது. சூரியனிலிருந்து 4.5 பில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள இந்த கிரகத்தில் இருப்பதெல்லாம் ஹைட்ரஜனும், மீத்தேனும், ஹீலியமும் தான். இதனால் இதன் நிறம் நீல நிறமாக உள்ளது. இங்கு தரை என்று ஏதும் கிடையாது. இது ஒரு "கேஸ் ஜயண்ட்".
1846ம் ஆண்டு இந்த கிரகம் எந்த இடத்தில் இருந்ததோ, அந்த இடத்தை கிட்டத்தட்ட 164.8 ஆண்டுகளுக்குப் பின் இன்று வந்து அடைந்துள்ளது நெப்டியூன். அதாவது நெப்டியூன் கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது, 165 வருடங்கள்.
கண்ணால் பார்க்காமலேயே காதல் மாதிரி, தொலைநோக்கி மூலம் பார்க்கப்படாமலேயே கண்டுபிடிக்கப்பட்ட முதல் கிரகம் நெப்டியூன் என்பது இதன் சிறப்பம்சமாகும். எப்படி யுரேனஸின் சுற்றுப் பாதையை ஏதோ ஒரு கிரகம் வருகிறது என்ற ஆராய்ச்சியின் மூலம் நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்டதோ, அதே மாதிரி கண்டுபிடிக்கப்பட்டது தான் புளுட்டோவும் என்பது குறிப்பிடத்தக்கது.
நெப்டியூனின் சுற்றுப் பாதையை ஏதோ ஒரு கிரகம் பாதிக்கிறது என்ற கோணத்தில் ஆராய்ச்சிகள் நடந்தபோது தான் புளுட்டோ கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இது முழுமையான கிரகமே அல்ல.. ஒரு முழுமை பெறாத கோள் (dwarf planet) என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் சூரிய குடும்பத்தின் கடைசி கிரகம் இன்றைய திகதியில் நெப்டியூன் தான். நெப்டியூன் என்பது ரோமன் பெயராகும். இதற்கு அர்த்தம் "கடல் சாமி" (Sea of God).

கடல் தாவரத்திலிருந்து உப்பு தயாரித்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை!!!!

இங்கிலாந்தின் ஷெபீல்ட் ஹாலம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உப்புக்கான மாற்றுப்பொருளை கண்டுபிடித்துள்ளனர்.
உடலில் உப்பின் அளவு அதிகரித்தால் உயர் ரத்த அழுத்தம், வலிப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
தொடர்ந்து அதிகரிக்கும் உப்பின் அளவு சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்தி உயிருக்கு அச்சுறுத்தலாகும். உப்பால் ஏற்படும் பாதிப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க உப்பின் அளவை வெகுவாக குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த தொடர் ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற ஆய்வு ஒன்று உப்புக்கான மாற்றுப் பொருளை கண்டுபிடித்துள்ளது. கடல் தாவரத்தில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த உப்பு உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
ஒரு வித வாசனையுடன் இருக்கும் இது சிறு படிகங்களாக உள்ளது. அதிக சத்துக்களை உள்ளடக்கியது. பருமனை குறைக்கவும் இதை பயன்படுத்தலாம் என்று தெரிகிறது. உணவு, பேக்கரி தயாரிப்பில் பயன்படுத்தலாம். இறுதிகட்ட ஒப்புதலுக்கு பிறகு அறிமுகப்படுத்தப்படும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

புற்று நோய்க்கு மருந்தாகும் தக்காளி!!!!

சமையலுக்கு உபயோகப்படுத்தும் சாதாரண தக்காளியில் செலினியம் என்ற சக்தி வாய்ந்த ஆண்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. இந்த பொருள் புற்றுநோயை தடுக்க உதவுகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரேசில் பருப்பு, மீனில் தாதுக்கள் உள்ளன. இவை தைராய்டு சுரப்பிக்கு மிக முக்கியமானதாக உள்ளது. தற்போது பிரிட்டன் சந்தைக்கு வந்த சூப்பர் தக்காளி 300 கிராம் 1.99 பவுண்ட்டிற்கு விற்கப்படுகிறது.
பிரிட்டன் உணவுகளில் இல்லாத கூடுதல் செலினிய தாது சத்துக்கள் இந்த புதிய தக்காளியில் உள்ளன. ஊட்டச்சத்து அமைப்பின் மருத்துவர் கரினா நோரிஸ் கூறியதாவது: செலினியம் நோய் எதிர்ப்புச் சக்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
உணவில் போதிய அளவு செலினியம் இருக்கும் போது புற்றுநோய் அபாயத்தை தவிர்க்கலாம். இந்த சூப்பர் தக்காளிகள் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெறுவதற்கு சரியான வழியாக உள்ளது என்றார். பிரிட்டனில் பத்தில் நான்கு பேருக்கு புற்று நோய் அபாயம் உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 30 சதவீதம் பேருக்கு இந்த புற்று நோய் அபாயம் அதிகரித்து உள்ளது. தினமும் பிரிட்டன் பெண்கள் 60 மில்லி கிராம் அளவிலும், 75 மைக்ரோ கிராம் அளவிலும் செலினிய தாதுக்கள் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதற்கும் குறைவான அளவிலேயே பிரிட்டனில் இந்த தாது உணவை எடுத்துக் கொள்கிறார்கள்.
புதிய வகை சூப்பர் தக்காளியை மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ட்சர் நிறுவனம் உருவாக்கி உள்ளது.

எய்ட்ஸ் நோய்க்கு மருந்தாக பயன்படும் புகையிலை!!!

புகையிலை சார்ந்த பொருட்களை பயன்படுத்த வேண்டாம். நீண்ட காலம் புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் சுவாசப் பிரச்சனையுடன் புற்றுநோயும் வரும் என மருத்துவர்கள் எச்சரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்ட புகையிலை மருந்தாகவும் பயன்படுகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். எச்.ஐ.வி எய்ட்ஸ் போன்ற ஆட்கொல்லி நோய் தவறான பழக்க வழக்கங்களினால் வருகிறது.
சிறிய குழந்தைகளுக்கும் தவறான ஊசி முறையால் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது. எச்.ஐ.வி பாதித்த நபர்களின் ஆயுட்காலம் எண்ணப்படுகிறது என்ற அச்சுறுத்தல் இருந்தாலும் அந்த நோய்க்கும் புதிய சிகிச்சை அளிக்க மருந்து தயாராகிறது.
இந்த மருந்து புகையிலையில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பது ஆச்சரியமான விடயம். தற்போதைய மருந்துகள் பாலூட்டி செல்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் எச்.ஐ.விக்கு புகையிலையில் மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சியில் லண்டன் பல்கலைகழகத்தின் செயின்ட் ஜார்ஜஸ் பகுதியை சார்ந்த பேராசிரியர் தலைமையிலான குழு வெற்றிகண்டுள்ளது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட புகையிலை மூலம் மருந்து தயாரிக்க ஆகும் செலவு தற்போதைய மருந்தை காட்டிலும் 100 மடங்கு குறைவாகும். 2008ம் ஆண்டு முடிவில் 15 வயதுக்கு மேற்பட்ட 83 ஆயிரம் பேருக்கு பிரிட்டனில் எச்.ஐ.வி பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது.

இளமைக்கு வழிவகுக்கும் திராட்சை!!!!!

திராட்சைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் புற்றுநோயை தவிர்க்கலாம். அது மட்டுமல்லாமல் முன் கூட்டிய வயோதிகத்தை தடுக்கவும் திராட்சை உதவுகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
திராட்சையில் உள்ள கூட்டுப் பொருள்கள் சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் கதிர்வீச்சில் இருந்து செல்களை பாதுகாக்க உதவுகிறது. புற ஊதா கதிர்கள் தோல் புற்றுநோயை ஏற்படுத்த காரணமாக உள்ளது.
பார்சிலோனா பல்கலைகழகம் மற்றும் ஸ்பானிஷ் தேசிய ஆராய்ச்சி கொவுன்சில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. புற ஊதா கதிர்வீச்சு பாதிப்பை தவிர்க்க திராட்சையில் உள் ப்ளேவனாய்ட் உதவுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆய்வின் இயக்குனரும் பார்சிலோனா பல்கலைகழக உயிரி வேதியியல் நிபுணருமான மார்டா காஸ்கன்டே கூறுகையில்,"சூரிய ஒளியின் மூலம் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க முடியும் என இந்த புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது" என்றார்.
அழகு சாதனப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றில் திராட்சை கூட்டுப் பொருள்கள் ஏற்கனவே உள்ளன. இருப்பினும் அவை தோல் செல்களை பாதுகாப்பதில் உரிய முறையில் செயல்படவில்லை. சூரிய கதிர்வீச்சால் தோலுக்கு ஏற்படும் சேதத்தை தவிர்ப்பதற்கு தற்போதைய ஆய்வு உதவும் என அவர் தெரிவித்தார்.

வியாழன், அக்டோபர் 20

உடல் களைப்பை உடனடியாக நீக்கும் சொக்லெட் பாணம்: ஆய்வின் தகவல்!!

அதிக வேலைப்பளு, உடற்பயிற்சி உள்ளிட்ட காரணங்களினால் உடல் சோர்வடைவது இயல்பு. இதுபோன்ற நேரங்களில் சோர்வை களைவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் உடனடி பலனை தராது.
ஆனால் லோ கலோரி சொக்லெட் ட்ரிங்க் உடல் களைப்பை உடனே போக்கிவிடும் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், டாக்டர் ஜான் கிவி தலைமையில் இது குறித்து மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டது.
ஆய்வுக்காக சுமார் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, ஆய்வுக்கு முந்தைய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் விளையாட்டு, வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். சுமார் 90 நிமிடம் தொடர்ந்து சைக்கிள் ஓட்டவும் கோரப்பட்டனர்.
இதில் களைப்பு அடைந்தவர்களுக்கு லோ கலோரி சொக்லெட் டிரிங்க் கொடுத்து பரிசோதித்தனர். களைப்பு நீங்கி அவர்கள் உற்சாகமாக காணப்பட்டனர். தொடர்ந்து 6 வாரங்கள் கண்காணிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உடல் எடை அதிகரிக்கவில்லை என்பதும் தெரிந்தது.
ஆய்வு குறித்து டாக்டர் ஜான் கூறுகையில், லோ கலோரி சொக்லெட் டிரிங்க் உடனடியாக உடல் சோர்வை போக்கும். குறைந்த கலோரி அளவுள்ள பாலாக இருந்தால் நல்லது. உடல் எடை அதிகரிக்காது.
பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள் இத்தகைய பானத்தையே அதிகம் எடுத்துக் கொள்கின்றனர். மிகக் குறைந்த கலோரிகள் அல்லது அதிக கார்போஹைட்ரேட் கொண்ட பானங்களால் இதுபோன்ற உடனடி பலன் கிடைப்பதில்லை. லோ கலோரி சொக்லெட் டிரிங்க் குடித்தால் உடல் எளிதாக அதிக பிராணவாயுவை எடுத்துக்கொள்வதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனால் விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி சாதாரணமானவர்களுக்கும் உடலில் சுவாசம் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. இது ரத்த சுத்தியை ஏற்படுத்தி ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
இதயநோய் பாதிப்புகளை விரட்டுகிறது. உடல்தசைகளும் இதனால் வலுப்பெறுகிறது. உடல் மற்றும் மனச்சோர்வை களைகிறது. இது இயல்பை விட அதிக சுறுசுறுப்பாக இயங்க வகை செய்கிறது. இதில் உள்ள அதிக அளவு புரதம் உடல் சுறுசுறுப்புக்கு உடனடி வழி செய்கிறது. இதனால் பாதிப்புகளோ பக்க விளைவுகளோ இல்லை.

புற்றுநோய் நோயாளிகள் தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அவசியம்!!!

புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கும் நோயாளிகள் வாரம் 2 மணி நேரம் கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என ஆய்வு அறிவுறுத்துகிறது.உடற்பயிற்சி செய்வதால் புற்றுநோய் பாதிப்பு குறைகிறது. சிகிச்சையால் ஏற்படும் பக்கவிளைவுகளும் குறைகின்றன என்று மாக்மில்லன் புற்றுநோய் ஆதரவு அறக்கட்டளை ஆய்வு கூறுகிறது.
புற்றுநோய் பாதித்த முதியோரும், புற்றுநோயில் மீண்டவர்களும் வாரத்திற்கு 150 நிமிடம் மிதமான தீவிரத்தை கொண்ட உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. மாக்மில்லன் அறிக்கைப்படி பிரிட்டனில் 20 லட்சம் புற்றுநோயாளிகள் உள்ளனர்.
இதில் 16 லட்சம் பேர் தீவிரமாக உடற்பயிற்சி செயல்பாடு இல்லாதவர்களாக உள்ளனர். பலவிதமான புற்றுநோய் சிகிச்சைக்கு முன்னரும் சிகிச்சைக்கு பின்னரும் உடற்பயிற்சி அவசியம் என விளையாட்டு மருத்துவத்திற்கான அமெரிக்க கல்லூரியும் வலியுறுத்துகிறது.
இதன் பரிந்துரையும் மாக்மில்லன் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. உடற்பயிற்சி மேற்கொள்வதால் புற்றுநோய் சிகிச்சைக்கு பின்னர் சோர்வை தராது, புத்துணர்ச்சியை தரும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
புற்றுநோயில் வேகமாக மீள்வதற்கு உடற்பயிற்சி அவசியம் என மாக்மில்லன் புற்றுநோய் தலைமை நிர்வாகி கிளாரன் தேவனே கூறுகிறார்.

தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சி செய்வது ஆயுட்காலத்தை மூன்று ஆண்டுகள் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்!!!!

தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சி செய்து வந்தால் ஆயுட்காலத்தில் 3 ஆண்டுகள் அதிகரிக்கும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
தினமும் 30 நிமிடம் பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என பிரிட்டனில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தினமும் 6 மணி நேரம் தொலைக்காட்சி முன்பாக அமர்ந்து படம் மற்றும் நிகழ்ச்சிகளை பார்ப்பதால் ஆயுட்காலத்தில் 5 ஆண்டுகள் குறைகின்றன என்று பிரிட்டிஷ் பத்திரிக்கை இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் 150 நிமிடம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என பிரிட்டிஷ் அரசு சமீபத்தில் பயிற்சி ஆலோசனையை அறிவித்து இருந்தது.
15 நிமிடத்திற்கு மேல் தினமும் கூடுதல் நேரம் உடற்பயிற்சி செய்யும் போது மரண காரணிகள் அபாயத்தை மேலும் நான்கு சதவீதம் குறைக்கும் என தைவான் தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சீனா மருத்துவ பல்கலைகழகம் கண்டறிந்துள்ளன. தைவான் ஆராய்ச்சி முடிவுகள் லான்செட் இதழில் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலிய ஆராய்ச்சி முடிவுப்படி நீண்ட நேரம் தொலைக்காட்சி முன்பாக உட்கார்ந்து இருந்தால் ஆயுட்காலம் குறையும் என எச்சரித்து உள்ளது. சிறு உடல் அசைவுப் பயிற்சிகள் அவசியம் என மேலும் அறிவுறுத்தியுள்ளது.

புற்றுநோய்க்கு மருந்தாகும் குங்குமப் பூ!!!

கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு குங்குமப்பூ உதவும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
ஐக்கிய அரபு குடியரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அமின் தலைமையிலான குழுவினர் கல்லீரல் புற்றுநோயை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
எலியைக் கொண்டு சோதனை மேற்கொண்டனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எலிகளுக்கு 2 வாரங்களுக்கு தினமும் குங்குமப் பூவை வெவ்வேறு அளவுகளில் கொடுத்து வந்தனர்.
பின்னர் செயற்கையாக கல்லீரல் புற்றுநோயை உருவாக்குவதற்கான டைஎத்தில் நைட்ரோசமைன்(டென்) என்ற மருந்தை செலுத்தினர். 22 வாரங்கள் கழித்து பரிசோதனை செய்ததில் அதிக அளவில் குங்குமப் பூ கொடுக்கப்பட்ட எலிகளுக்கு குறைவாக கொடுக்கப்பட்ட எலிகளைவிட புற்றுநோய் செல்களின் வளர்ச்சி குறைவாக காணப்பட்டது.
இதன் மூலம் குங்குமப் பூ கல்லீரல் புற்றுநோயை கட்டுப்படுத்தும் என உறுதி செய்தனர்.
உணவுப் பொருட்களுக்கு ஆரஞ்ச் வண்ணம் கொடுப்பதற்காக குங்குமப் பூ பயன்படுத்தப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இது கல்லீரல் புற்றுநோய்க்கு காரணமாக செல்களை அழிக்கிறது அல்லது வளர்வதைக் கட்டுப்படுத்துகிறது என அமின் தெரிவித்தார்.

திருமணமான பெண்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்!!!

திருமணமான பெண்கள், விவாகரத்தான ஆண்களின் உடல் பருமன் விரைவில் அதிகமாகிறது. அதிலும் இடுப்பு பகுதியில் தான் அதிகம் சதை போடுகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு.
உடல் பருமனால் உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் அவதிப்படுகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
அமெரிக்காவின் ஒஹியோ மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் டிமித்ரி ட்யுமின் தலைமையில் உடல் பருமன் குறித்து சமீபத்தில் விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.
1986ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆண், பெண்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த ஆராய்ச்சி நடந்தது.
ஆய்வு ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதாவது: பெண்கள் திருமணத்துக்கு பிறகும், ஆண்கள் விவாகரத்து ஆன பிறகும் உடல் எடை விறுவிறுவென அதிகமாகிறது. இதில் பெரும்பாலானவர்கள் 30 வயதை கடந்தவர்கள்.
பெரும்பாலும் இடுப்பு பகுதியில் தான் அதிகம் சதை போடுகிறது. இந்த நிலை 50 வயது வரை நீடிக்கிறது. திருமணம் ஆன 2 ஆண்டுகள் வரை அல்லது விவாகரத்தான 2 ஆண்டுகள் வரை இத்தகைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. திருமணம் ஆகாதவர்களைவிட திருமணம் ஆனவர்கள் குண்டாகும் வாய்ப்பு அதிகம்.

உலகில் உள்ள உயிரினங்களின் எண்ணிக்கை 87 லட்சத்து 40 ஆயிரம்: ஆய்வாளர்கள் தகவல்!!!

பூமியில் மனிதர்களை தவிர 87 லட்சம் உயிரின வகைகள் வாழ்கின்றன. இந்த உயிரினங்களில் பெரும்பாலான எண்ணிக்கையில் இருப்பது விலங்குகள் ஆகும்.
உலகில் இன்னும் 14 சதவீத உயிரின வகைகளை கண்டுபிடிக்கவில்லை. இதில் 9 சதவீத உயிரினங்கள் கடல் நீரில் வாழ்கின்றன.
கண்டுபிடிக்கப்படாத உயிரின வகைகளை கண்டறிவதற்கு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம். உயிரின வகைளில் பூஞ்சை, தாவரங்கள், ஒற்றை செல் உயிரினமான புரோட்டோ சோவா, குரோமி உள்ளிட்ட ஆல்கேக்கள் உள்ளன. குடும்ப மர வகைகள் மற்றும் உயிரினத்தை ஆய்வு செய்த போது உலக உயிரின வகை விவரம் தெரியவந்தது.
பிஎல்ஓ உயிரியல் இதழில் உயிரின வகை ஆய்வு கட்டுரை வெளியாகி உள்ளது. பல உயிரினங்கள் கண்டுபிடிப்பற்கு முன்னர் அழியும் அபாயத்தில் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த ஆய்வு விவரத்தை மேற்கொண்ட விஞ்ஞானிகளில் ஒருவரான ஐநா சுற்றுச்சூழல் உலக பாதுகாப்பு கண்காணிப்பு மையத்தன் ஆய்வாளர் டொக்டர் டிடேன்சர் தொவித்தார். கேம்பிரிட்ஜ் மைக்ரோ சாப்ட் ஆராய்ச்சி மற்றும் கனடாவின் டால்ஹவுஸ்லே பல்கலைகழகம், ஹவாய் பல்கலைகழகம் ஆகியவற்றின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த உயிரின வகை விவரங்கள் தெரியவந்துள்ளன.
பூமியில் தற்போது 12 லட்சம் உயிரினங்கள் முறைப்படி வரையறுக்கப்பட்டுள்ளன. இதில் கடல் உயிரினங்களை காட்டிலும் நில உயிரினங்கள் அதிகம் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
உலகில் 77 லட்சத்து 77 ஆயிரம் விலங்குகள் உள்ளன. 61 ஆயிரம் பூஞ்சைகள் உள்ளன. 30 ஆயிரம் தாவரங்கள் உள்ளன. புரோட்டோசோவா உயிரினங்கள் 40 ஆயிரம் உள்ளன என தெரியவந்துள்ளது.

தினமும் உபயோகிக்கும் ரசாயன பொருட்களால் உடல் பருமன் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்!!

தொடர் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி இரண்டும் உடல் எடையை குறைக்க மேற்கொள்ளப்படும் முக்கியமான வழிமுறைகள்.
உடல் பருமனுக்கு இவை மட்டுமே காரணம் என்பது பரவலான கருத்து. இதையும் தாண்டி மற்றொரு விஷயமும் இருக்கிறது என்கின்றனர் நியூயார்க் மவுன்ட் சினாய் மருத்துவக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
பிலிப் லேன்ட்ரிகன் தலைமையில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் குளியல் சோப்பு, ஷாம்பு மற்றும் பாடி லோஷன்கள் போன்ற அழகுசாதன பொருட்களில் உள்ள ரசாயன கலப்பு உடல் பருமனை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வுக்காக நியூயார்க் இன்னர் சிட்டி பகுதியில் உள்ள ஏராளமான குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் இருந்து அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு மற்றும் இதர பொருட்கள் குறித்த தகவல்கள் பெறப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களின் சிறுநீர் அன்றாட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அதிக ரசாயன கலப்பு கொண்ட சோப்பு, ஷாம்பு போன்ற அழகுசாதனப் பொருட்கள் பயன்படுத்துவோருக்கு சிறுநீரில் அதிக அளவு  "பிதலாடஸ்" ரசாயன மூலப்பொருள் இருந்தது தெரியவந்தது.
உடல்வாகுக்கு ஏற்பவும் ரசாயன கலப்பு பயன்பாட்டை பொருத்தும் உடல் பருமன் ஏற்பட்டது தெரியவந்தது. உடல்பருமனுக்கு ஏற்ப பிதலாடசின் அளவு இருந்தது. இது உடல் பருமனுக்கு காரணமானது என்பது இதன் மூலம் நிரூபணமாகி உள்ளது.
2007-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சிலர் 1,451 பேரிடம் ரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்து ஆண்களின் தொப்பை மற்றும் நீரிழிவு நோய்க்கு ரசாயன பொருட்கள் காரணமாக இருப்பதை கண்டறிந்தனர்.
மவுன்ட் சினாய் மருத்துவக்கழக ஆய்வு தகவல்கள் வருமாறு: பெரும்பாலான ரசாயனங்களில் பிதலாடஸ் என்ற மூலப்பொருள் 70 சதவீதம் உள்ளது. இவை அடர்த்திக்காகவும் கொழகொழப்புக்காகவும் சேர்க்கப்படுகிறது.
இந்த வகை ரசாயனங்கள்தான் சோப்பு, ஷாம்பு, அழகுசாதன பொருட்களில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்களிலும் இந்த ரசாயனத்தின் பயன்பாடு அதிகம்.
பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிப்பிலும் இந்த ரசாயனத்தின் பயன்பாடு உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களில் பிஸ்பினால்-ஏ(பிபிஏ) என்ற ரசாயன மூலப்பொருளும் அதிகம் உள்ளது. இந்த இரண்டுமே உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது ஆய்வில் உறுதியாகி உள்ளது.
முக்கியமாக இவை உடல் எடையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவற்றை தொடர்ந்து பயன்படுத்துவது, குழந்தைகளிடையே உடல் பருமன் பாதிப்பை விரைவில் ஏற்படுத்துகிறது. சுரப்பிகளின் செயல்பாடுகளை பாதிக்கும் இவை "என்டோக்ரைன் டிஸ்ட்ரப்டர்ஸ்" எனப்படும்.

தினமும் 15 நிமிடம் சிரிப்பது உடல் நலத்திற்கு நல்லது: ஆய்வில் தகவல்

"வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்" என்பது பழமொழி. மன அழுத்தமே பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக உள்ளது.
அதாவது, மன அழுத்தம் உடையவர்கள் ஆல்கஹால், போதை மருந்து மற்றும் சிகரெட் புகைத்தல் போன்ற கெட்ட பழக்கவழக்கத்துக்கு ஆளாகின்றனர். அதுவே அவர்களுக்கு மிக கொடிய நோய்களை ஏற்படுத்துகிறது.
எனவே மன அழுத்தம் உள்ளவர்கள் அதுபோன்ற கெட்ட பழக்கத்தை விட்டு தினமும் 15 நிமிடம் சிரித்தாலே போதும். உடல் நலம் மேம்படும். அவர்களை நோய் அண்டாது என இருதய நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வாய்விட்டு சிரிப்பது தான் நல்லது. வாய்க்குள்ளேயே சிரிக்கும் நமட்டு சிரிப்பும், மூச்சு வாங்க சிரிக்கும் சிரிப்பும் உடல் நலத்துக்கு கேடானது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
நாள் ஒன்றுக்கு ஒரு குழந்தை 300 முதல் 400 தடவை சிரிக்கிறது. பெரியவர்கள் 15 தடவை சிரிக்கின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

உடற்பயிற்சி செய்வதை விட சொக்லேட் சாப்பிடுவது நல்லது: விஞ்ஞானிகள் தகவல்!!!

உடற்பயிற்சி செய்வதை விட சொக்லேட் சாப்பிடுவது நல்லது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆய்வில் சொக்லேட்டில் காணப்படும் mitochondria என்ற மூலப்பொருளில் தசைநார்களின் செயற்பாட்டைத் தூண்டக்கூடிய தன்மை உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது அதிகளவில் காணப்பட்டால் அதிக சக்தியையும் உற்பத்தியாக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓடுதல் மற்றும் சைக்கிளோடுதல் போன்ற உடற்பயிற்சிகளின் போது அதிகரிக்கப்படும் மூலப்பொருளும் இதுவாகத் தான் இருக்கிறது.
15 நாட்களிற்கு நாளாந்தம் இருமுறை கொக்கோவிலிருந்து எடுக்கப்பட்ட இந்த மூலப்பொருள் எலிகளிற்குக் கொடுக்கப்பட்டுப் பரீட்சித்துப் பார்க்கப்பட்டது.
இதேவேளை சிலவற்றை ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி இயந்திரத்தில் விட்டுப்பார்த்துள்ளனர். இதன் மூலம் இரண்டிலும் பெறப்பட்ட சக்தி வகைகளும் ஒத்தவையாகவே காணப்பட்டன

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் எலும்புகள் உருவாகுகின்றன: ஆய்வில் தகவல்!!

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் எலும்புகள் உருவாகின்றன என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நன்மை பயக்கும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. தற்போது இதனால் புதிய எலும்புகள் உருவாகுகின்றன என கண்டறியப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி செய்யாவிட்டால் உடலில் தேவையற்ற கொழுப்பு ஏற்பட்டு நோய் ஏற்படுகிறது. அதே நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால் சக்தி வாய்ந்த ஸ்டெம் செல்களில் உடனடி மாற்றம் நிகழ்ந்து அவை எலும்பாக மாறுகிறது.
இதற்கான ஆய்வை அமெரிக்காவில் உள்ள மேக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எலியின் மூலம் மேற்கொண்டனர். டிரெட்மில் என்ற உடற்பயிற்சி சாதனத்தின் மூலம் ஒரு எலிக்கு தொடர்ந்து உடற்பயிற்சி அளித்தனர்.
அந்த எலியின் உடலில் மாற்றம் ஏற்பட்டு எலும்பு உருவானது. அதே நேரத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடுத்தாத எலிகளின் உடலில் எலும்புக்கு பதிலாக கூடுதல் கொழுப்பு ஏற்பட்டிருந்தது. இதன் மூலம் தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சி உடலில் புதிய எலும்பை உருவாக்குவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

25 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய சுனாமி: ஆய்வாளர்கள் தகவல்!!

இந்திய பெருங்கடல் தோன்றுவதற்கு முன்பு பல கடல்கள் ஒன்றாக இருந்த நேரத்தில் காஷ்மீர் பகுதியில் சுனாமி ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என  ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நில அமைப்புகள், புவியியல் மாற்றங்கள், சுனாமி ஆகியவை தொடர்பாக அமெரிக்காவின் மசாசூசட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் மைக்கேல் ப்ரூக்பீல்டு ஆராய்ச்சி செய்து வருகிறார்.
ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் புவியியல், புவி இயற்பியல், புவி தகவலியல் துறைகள் சார்பில் அவரது சிறப்புரை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதில் அவர் தெரிவித்த தகவல்கள்: பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்கள் தற்போது இருப்பது போல பல பிரிவுகளாக இல்லை. 20 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டிரயாசிக் காலத்தின் போது லாரேசியா, கோண்ட்வானா என இரு பிரிவுகள் மட்டுமே இருந்தன.
டேதிஸ் கடலால் அவை இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தன. 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த டேதிஸ் கடலில் இருந்து எழுந்த ஆழிப் பேரலை, குரியுல் கணவாய் பகுதியை பயங்கரமாக தாக்கியுள்ளது. இப்பகுதி தற்போது காஷ்மீரில் இருக்கிறது. டேதிஸ் கடல்தான் பின்னர் பலவிதமாக உருமாறி இந்திய பெருங்கடலாக மாறியது.
காஷ்மீரின் குரியுல் பள்ளத்தாக்கு பகுதியில் பல்வேறு விதமான படிமங்கள் கிடைத்துள்ளன. உலகின் பல பகுதிகளை சேர்ந்த தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களும் இங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர். 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி வந்ததற்கான படிம ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன. இதுதொடர்பாக மேலும் ஆய்வுகள் நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

மூளைக் கோளாறுக்கு அருமருந்தாகும் சிரிப்பு: ஆய்வுத் தகவல்!!

சிரிப்பு தான் உலகின் சிறந்த மருந்து என்பது நமக்குத் தெரிந்தது தான். ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று மூளைக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிரிப்பு அருமருந்தாகப் பயன்படுவதாகத் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள 36 மருத்துவமனைகள் மற்றும் 400 வீடுகளில் கடந்த மூன்றாண்டுகளாக வயதானோரிடையே ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.
நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய இதில் விளையாட்டுகள், நகைச்சுவை மற்றும் பாடல்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
ஆய்வாளர்கள் தினசரி மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்குச் சென்று வயதானோருடன் பேசி சிறிது நேரம் இருப்பர். அப்போது விளையாட்டு, நகைச்சுவை போன்றவற்றை அவர்களுடன் பகிர்ந்து கொள்வர்.
இந்த ஆய்வில் 200 வீடுகளில் உள்ள வயதானோரைச் சந்திக்கும் ஆய்வாளர்கள், விளையாட்டு போன்ற எதையுமே பயன்படுத்தாமல் வெறுமனே பேசி விட்டு வந்து விடுவர்.
ஆய்வின் இறுதியில் வயதானோர் குறிப்பாக பல்வேறு நோய்களால் மூளைக் கோளாறு ஏற்பட்டு அதனால் பாதிக்கப்பட்டோர், விளையாட்டு, நகைச்சுவை போன்றவற்றால் மூளைக் கோளாறின் பாதிப்பில் இருந்து 20 சதவீதம் விடுபட்டது தெரியவந்தது.

செவ்வாய் கிரகத்தில் எதிர்பார்த்ததை விட அதிகளவு தண்ணீர்: விஞ்ஞானிகள் தகவல்!!!


செவ்வாய் கிரகத்தில் எதிர்பார்த்ததை விட 100 மடங்கு அதிகம் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி மற்றும் சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் குழுவினர் “சிவப்பு கிரகம்” என அழைக்கப்படும் செவ்வாய் கிரகம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த கிரகத்தின் காற்று மண்டலத்தில் உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்தனர். அவை ஓரளவு தான் உள்ளது என விஞ்ஞானிகள் கணித்து இருந்தனர்.
ஆனால் தற்போது செவ்வாய் கிரகத்தின் காற்று மண்டலத்தில் அவை ஆவி நிலையில் பறந்து விரிந்து கிடக்கிறது. துகள்கள் மற்றும் தூசிகள் போன்று காற்றில் மிதக்கின்றன.
அவை காற்று மண்டலத்தில் ஆங்காங்கே மேக கூட்டம் போன்று இருக்கின்றன. எனவே செவ்வாய் கிரகத்தில் எங்கும் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
முன்பு கணித்ததை விட 100 மடங்கு அதிகம் தண்ணீர் இருப்பதாக தற்போது அறிவித்துள்ளனர். இந்த ஆய்வை சிப்காம் என்ற கருவியின் மூலம் நடத்தி தண்ணீர் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

சந்திரனில் பூமியை விட அதிக அளவில் டைட்டேனியம் தாதுக்கள் உள்ளது: விஞ்ஞானிகள் தகவல்!!!

சந்திரனில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்கா ஒரு விண்கலம் அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கமெராக்கள் சந்திரனின் மேற்பரப்பை புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
ஏழு விதமாக எடுத்து அனுப்பப்பட்ட அவற்றை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதன் மூலம் ஏற்கனவே கடந்த 1972ம் ஆண்டு அப்பல்லோ-17 விண்கலம் மூலம் சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர்கள் அங்கு வெட்டி எடுத்து வந்த பாறைகளில் பரிசோதனை மேற்கொண்டனர்.
அதில் டைட்டேனியம் டி என்ற உலோக தாதுக்கள் இருப்பது தெரியவந்தது. டைட்டேனியம் என்பது உருக்கு உலோகத்தை விட மிகவும் உறுதியானது.
இந்த உலோகம் பூமியில் ஒரு சதவீதம் தான். அதாவது மிக குறைவாக உள்ளது. ஆனால் சந்திரனில் அவை கொட்டிக் கிடக்கின்றன. அதாவது 10 மடங்கு அதிகம் இருக்கிறது. இவை பாறைகளில் மறைந்து கிடக்கின்றன. டைட்டேனியம் தவிர இரும்பு தாதுக்களும் மறைந்துள்ளன.
இந்த தகவலை அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்க் ராபின்சன் தெரிவித்தார். பிரான்சில் உள்ள நான்டெஸ் என்ற நகரில் நடந்த மாநாட்டில் தனது ஆய்வறிக்கையை தாக்கல் செய்து இந்த தகவலை வெளியிட்டார்.

தினமும் கிரீன் டீ குடித்தால் உடல் இளைக்கும்: ஆய்வாளர்கள் தகவல்!!!

தினமும் கிரீன் டீ குடித்தால் குண்டு உடல் நன்றாக இளைக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எலிகளை வைத்து ஆய்வு நடத்தினர்.
இரு பிரிவாக எலிகளை பிரித்து அவற்றுக்கு சம அளவில் அதிக கொழுப்புள்ள உணவுகளை கொடுத்து வந்தனர். ஒரு பிரிவு எலிகளுக்கு மட்டும் கிரீன் டீயில் உள்ள எபிகேலோகேட்டசின்-3-கேலேட்(இஜிசிஜி) என்ற மூலப்பொருள் கொடுக்கப்பட்டது.
ஆய்வில் இஜிசிஜி மூலப்பொருள் கொடுக்கப்பட்ட எலிகளின் உடல் எடை மற்ற எலிகளை காட்டிலும் குறைவாக இருந்தது.
அவற்றின் உடலில் குறைவான அளவு கொழுப்பு கிரகிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஆராய்ச்சி குழுவை சேர்ந்த ஜோசுவா லேம்பர்ட் கூறும்போது, கிரீன் டீயில் உள்ள இஜிசிஜி மூலப்பொருள், உடல் கொழுப்பு கிரகிப்பதை கணிசமாக குறைக்கிறது. மேலும் உடலில் இருக்கும் கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது.
தினமும் 10 கப் கிரீன் டீ குடிப்பதன் மூலம் மனிதர்களும் இந்த பயனை அடைய முடியும். குண்டு உடல் உள்ளவர்கள் உணவு பழக்கத்தில் பெரிய மாற்றங்கள் செய்யாமல் உடல் எடையை நன்றாக குறைக்க முடியும். இதுகுறித்து மேலும் விரிவான ஆய்வு நடந்து வருகிறது என்றார்.
இதயநோய், புற்றுநோய் போன்றவற்றுக்கும் கிரீன் டீ அருமருந்து என்று ஏற்கனவே பல ஆய்வுகள் கூறியுள்ளன.

சத்தங்களை எழுப்பி தகவல்களை பரிமாறும் மீன்கள்: ஆய்வில் தகவல்!!!!

ஆசை, அடிதடி ஆகியவற்றுக்கு பிரன்ஹாஸ் மீன்கள் 3 சத்தங்களை எழுப்பி தகவல் தெரிவிப்பதாக பெல்ஜியம் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
பெல்ஜியம் நாட்டின் லீஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரின ஆராய்ச்சியாளர் எரிக் பார்மென்டீர்.
இவர் தனது ஆய்வகத்தில் பல வகை மீன்களை தொட்டியில் வளர்த்து அவற்றின் தகவல் பரிமாற்றம் பற்றி ஆராய்ந்தார். அவற்றில் பிரன்ஹாஸ் மீன்கள் தகவல் தொடர்புக்கு 3 விதமான சத்தங்களை பயன்படுத்துவதாக கண்டுபிடித்தார்.
இதுபற்றி எரிக் கூறியதாவது: மற்றவர்கள் கவனத்தை கவர சண்டையிடுவதைவிட சத்தம் எழுப்புவது குறைவான சக்தியை வெளியிடும் என்பதை விலங்குகள் அறிந்துள்ளன.
இணையை கவர்வதற்கு பல வகை மீன்கள் சத்தம் எழுப்புவது உண்டு. இனவிருத்திக்கு மீன்கள் சத்தம் எழுப்புவது அவசியமான அறிகுறி என இதன்மூலம் தெரிகிறது.
மீன்கள் எழுப்பும் சத்தத்தை புரிந்து கொள்வதன் மூலம் அவற்றின் நடவடிக்கைகளை அறிய முடிந்தால் கடலில் மீன்களை நம்பியுள்ள மீனவர்களுக்கு அதுபற்றி நாம் தெரிவிக்க முடியும்.
அதற்கான சரியான நேரம் இன்னும் வரவில்லை. எனினும் ஆய்வகத்தில் பிரன்ஹாஸ் மீன்களின் தகவல் பரிமாற்றத்தை நீருக்கடியில் மைக்ரோபோன் பொருத்தி பொறுமையாக காத்திருந்து பதிவு செய்தோம்.
அதில் முதல் சத்தம் குரைப்பது போல இருக்கிறது. அது தனது வருகையை மற்ற மீன்களுக்கு உணர்த்துவதாக இருக்கிறது. சண்டையிடுவதற்கு பதிலாக சத்தம் மூலம் மிரட்டுவதாக உள்ளது.
டிரம்ஸ் எழுப்பும் சத்தம் போல உள்ள அடுத்த 2 ஒலிகளை மீன்கள் ஒன்றையொன்று துரத்தும் போதும், கடிக்கும் போதும் எழுப்புகின்றன. பொதுவாக உணவுக்காக சண்டை நடக்கும்போது இதுபோன்ற சத்தம் எழுகிறது.

அடுத்த 90 ஆண்டுகளுக்குள் கடல் மட்டம் 2 அடி உயரும்: ஆராய்ச்சியாளர்கள் தகவல்!!!!

பூமி வெப்பமயமாகி வருவதால் அடுத்த 90 ஆண்டுகளுக்குள் கடல் நீர் மட்டம் 2 அடி உயரும் என கோபன்ஹெகன் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் இதர சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக பூமி வேகமாக வெப்பமயமாகி வருகிறது.
இதனால் அட்லான்டிக் கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்போது உள்ள நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டம் 2 அடியும், அதற்கடுத்த 4 ஆண்டுகளில் 6 அடியும் உயரும்.
இதனால் கடற்கரையை ஒட்டி உள்ள தாழ்வான பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடல் மட்டம் சில இடங்களில் உயர்வதாலும், சுனாமி ஏற்படுவதாலும் சிறிய தீவுகள் காணாமல் போவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

250 சதுர கிலோமீற்றர் பரப்புக்கு ஓசோன் படலத்தில் ஓட்டை: அதிர்ச்சித் தகவல்!!!!

காடுகள் அழிக்கப்படுவதாலும், நிலம், நீர், காற்று ஆகிய மூன்றும் வேகமாக மாசுபடுத்தப்படுவதாலும் ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்த ஓட்டையின் அளவு 97 லட்சம் சதுர மைல்கள் அதாவது 250 லட்சம் சதுர கிலோமீற்றர்கள் அளவுக்கு இருக்கிறது என்று செயற்கைக் கோள்கள் படம் பிடித்துக் காட்டியுள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம் 14ம் திகதி ஓசோன் ஓட்டை படம் பிடிக்கப்பட்டு அளக்கப்பட்டது. இன்றைய வட அமெரிக்கக் கண்டத்தின் பரப்பளவுக்குச் சமமான அளவுக்கு ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது. இவ்வளவு பெரியதை ஓட்டை என்று சொல்வதே பொருத்தம் இல்லை.
ஆறுதல் தரும் ஒரே விஷயம் ஏற்கெனவே ஒரு முறை இதைவிட அதிக அளவில் இந்த ஓட்டை அளக்கப்பட்டிருக்கிறது. அதாவது 2006ல் 1,060 லட்சம் சதுர மைல்கள் அளவுக்கு ஓட்டை இருந்தது. 
சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் கூடி உறுதியான நடவடிக்கைகளை எடுத்தால் தான் புவியைக் காப்பாற்ற முடியும். அண்டார்டிகா துருவப்பகுதியில் ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டிருக்கிறது என்பதை 1970களில் செயற்கைக் கோள்கள் தான் முதல் முறையாகக் கண்டுபிடித்தன.
ஆனால் அது குறித்து கவலைப்பட்டும் எச்சரித்தும் பேசிய உலகின் முன்னேறிய நாடுகள் அனைத்துமே ஓசோன் படலம் ஓட்டை விழாமல் காப்பதற்கான நடவடிக்கைகளில் உளப்பூர்வமாக ஈடுபடவில்லை என்பதே உண்மை.
இதனால் 1980களிலும், 1990களிலும் இந்த ஓட்டை பெரிதாகிக் கொண்டே வந்துள்ளது. ஆர்டிக் கடல்பகுதியில் புவிக்கு மேலே உள்ள வளிமண்டலத்தில் கடுமையான குளிர்ச்சி ஏற்பட்டது. அதன் பிறகு ஓசோன் படலத்தைக் கரையவைக்கும் ரசாயனங்கள் உயிர்ப்படைந்து ஓட்டையைப் பெரிதாக்கின.
புவிக்கு மேலே உள்ள பகுதியில் வேண்டுமானால் ஓசோன் என்பது மாசுப்படலமாக இருக்கலாம். ஆனால் விண்வெளியிலிருந்து புவியை நோக்கி வரும் பாதகமான புறஊதாக் கதிர்களைத் தடுத்து அப்படியே திருப்பி அனுப்பும் கேடயமாக ஓசோன் படலம் செயல்படுகிறது.
குளோராபுளோரா கார்பன்கள் தான் ஓசோன் படலத்தைத் துளைக்கின்றன என்பதால் அவற்றுக்கு இப்போது தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஓரளவுக்கு ஓசோன் படலம் மீட்சி பெற்று வருகிறது. அப்படியும் மிக மெதுவாக இந்தச் சிதைவு தொடர்கிறது.
புவியிலிருந்து 8.7 மைல் முதல் 13.7 மைல் வரையிலான உயரத்தில் தான்(14 கிலோமீற்றர் முதல் 22 கிலோமீற்றர் வரை) இந்தச் சிதைவு ஏற்பட்டிருக்கிறது.
முதல் முறையாக இந்த ஆண்டு ஆர்டிக் கடல் பரப்பிலும் ஓசோன் படலத்தில் துளை ஏற்பட்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு தொடர்கிறது.
இம்மாதம் 27ம் திகதி நாசாவின் மற்றொரு செயற்கைக் கோள் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள சிதைவின் தன்மையை வெகு நெருக்கமாகச் சென்று படம் பிடித்து ஆய்வு செய்யப் போகிறது.

நம்ப முடியவில்லை அதிசயம் ஆனால் உண்மை....!!!









கல்முனை மாநகர சபைக்கான மாநகர மேயர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்...












கடந்த எட்டாந்திகதி நடை பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற  கல்முனை மாநகர சபைக்கான  மாநகர மேயர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
கல்முனை மாநகர ஆணையாளர் எம்.ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்  கல்முனை மக்கள் வங்கி சந்தியில் இருந்து  வரவேற்கப்பட்டு அழைத்து வரப் பட்டார்.
மும் மத  தலைவர்களின் ஆசியுடன் இடம் பெற்ற இவ்வைபவத்தில்  மாநகர சபைக்கு தெரிவு செய்யப் பட்ட  உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாநகர சபை பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட முதல்வர் மாநகர சபை உத்தியோகத்தர்களையும் ஊழியர்களையும் சந்தித்த போது அவர்களும் வாழ்த்து  தெரிவித்தனர்.
பதவி ஏற்றதன் பின்னர் அங்கு நடை பெற்ற கலந்துரையாடலில் கடந்த தேர்தலின் போது நடந்த சம்பவங்களை மறந்து அனைவரும் மக்களுக்கு சேவை என்ற என்னத்தை கொண்டு  செயற்ட்    பட வேண்டும் என முதல்வர் சிராஸ் அங்கு தெரிவித்தார்.