தொடர் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி இரண்டும் உடல் எடையை குறைக்க மேற்கொள்ளப்படும் முக்கியமான வழிமுறைகள்.
உடல் பருமனுக்கு இவை மட்டுமே காரணம் என்பது பரவலான கருத்து. இதையும் தாண்டி மற்றொரு விஷயமும் இருக்கிறது என்கின்றனர் நியூயார்க் மவுன்ட் சினாய் மருத்துவக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
பிலிப் லேன்ட்ரிகன் தலைமையில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் குளியல் சோப்பு, ஷாம்பு மற்றும் பாடி லோஷன்கள் போன்ற அழகுசாதன பொருட்களில் உள்ள ரசாயன கலப்பு உடல் பருமனை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வுக்காக நியூயார்க் இன்னர் சிட்டி பகுதியில் உள்ள ஏராளமான குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் இருந்து அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு மற்றும் இதர பொருட்கள் குறித்த தகவல்கள் பெறப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களின் சிறுநீர் அன்றாட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அதிக ரசாயன கலப்பு கொண்ட சோப்பு, ஷாம்பு போன்ற அழகுசாதனப் பொருட்கள் பயன்படுத்துவோருக்கு சிறுநீரில் அதிக அளவு "பிதலாடஸ்" ரசாயன மூலப்பொருள் இருந்தது தெரியவந்தது.
உடல்வாகுக்கு ஏற்பவும் ரசாயன கலப்பு பயன்பாட்டை பொருத்தும் உடல் பருமன் ஏற்பட்டது தெரியவந்தது. உடல்பருமனுக்கு ஏற்ப பிதலாடசின் அளவு இருந்தது. இது உடல் பருமனுக்கு காரணமானது என்பது இதன் மூலம் நிரூபணமாகி உள்ளது.
2007-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சிலர் 1,451 பேரிடம் ரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்து ஆண்களின் தொப்பை மற்றும் நீரிழிவு நோய்க்கு ரசாயன பொருட்கள் காரணமாக இருப்பதை கண்டறிந்தனர்.
மவுன்ட் சினாய் மருத்துவக்கழக ஆய்வு தகவல்கள் வருமாறு: பெரும்பாலான ரசாயனங்களில் பிதலாடஸ் என்ற மூலப்பொருள் 70 சதவீதம் உள்ளது. இவை அடர்த்திக்காகவும் கொழகொழப்புக்காகவும் சேர்க்கப்படுகிறது.
இந்த வகை ரசாயனங்கள்தான் சோப்பு, ஷாம்பு, அழகுசாதன பொருட்களில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்களிலும் இந்த ரசாயனத்தின் பயன்பாடு அதிகம்.
பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிப்பிலும் இந்த ரசாயனத்தின் பயன்பாடு உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களில் பிஸ்பினால்-ஏ(பிபிஏ) என்ற ரசாயன மூலப்பொருளும் அதிகம் உள்ளது. இந்த இரண்டுமே உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது ஆய்வில் உறுதியாகி உள்ளது.
முக்கியமாக இவை உடல் எடையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவற்றை தொடர்ந்து பயன்படுத்துவது, குழந்தைகளிடையே உடல் பருமன் பாதிப்பை விரைவில் ஏற்படுத்துகிறது. சுரப்பிகளின் செயல்பாடுகளை பாதிக்கும் இவை "என்டோக்ரைன் டிஸ்ட்ரப்டர்ஸ்" எனப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக