செவ்வாய், டிசம்பர் 20

அலைகளால் உருவான அதிசயக் குகை..! (படங்கள் இணைப்பு)

இயற்கையின் அரிய சில செயற்பாடுகள் மனித நடத்தை மற்றும் உலக அமைப்பில் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
அதேபோல் தான் பூமியின் வடிவமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் விஞ்ஞானிகளாலும் புவியலாளர்களாலும் நோக்கத் தக்கவையாக அமைகின்றன.
எனினும் புவி மேற்பரப்பில் நிகழும் ரசிக்கத்தக்க மாற்றங்கள் சாதாரண மனிதனையும் திரும்பி பார்க்க வைக்கின்றன.
அவ்வாறான ஒரு மாற்றம் தான் இங்கும் நிகழ்ந்திருக்கிறது. மில்லியன் கணக்கான வருடங்களாக ஏற்பட்ட அலைஅரிப்புகளால் அதிசய உலகங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன.
இதனால் 70மீ. ஆழமான குகைகள்கூட ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் Belize நாட்டின் Great Blue Hole என்ற குகைக்குள் 407அடி ஆழத்திற்குள்கூட சுழியோடிகளால் போகமுடியும்.
                                            Belize இன் Great Blue Hole குகை. புகழ்பெற்ற ஸ்கியூபா சுழியோடலிற்கான இடம்.!

                                                                              கலிபோர்னியாவிலுள்ள நீரடிக் குகை

                                                     விஸ்கொன்சின் சுப்பீரியர் ஏரியிலுள்ள Apostle Islands பனிக்குகை.

             சாடினியாவிலுள்ள Belvedere குகை – இந்தக் குகையினை கடல் தெய்வமான நெப்ரியூனின் வீடெனக் கூறுகின்றனர்.

Oregon பகுதியிலுள்ள Sea Lion Cave என்ற குகை உலகின் நீரடிக் குகைகளில் மிகவும் பெரியதாகும். இங்கு கடற்சிங்கங்கள் உட்பட பலதரப்பட்ட உயிர்கள் வாழ்கின்றன.

                                       அயர்லாந்திலுள்ள Giant’s Causeway. இதுவும் ஸ்கொட்லாந்தை ஒத்தவடிவக் குகைதான்.

                                                                               ஸ்கொட்லாந்திலுள்ள Fingal குகை.

ஆண் வர்க்கத்தில் கர்ப்பம் தரித்து குழந்தை பெறும் ஒரே உயிரினம்..!!(காணொளி இணைப்பு)

கண்களை எந்தப் பக்கமும் திருப்புதல், குதித்து குதித்து ஓடும் ஒருவகை மீன் இனம், குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால், ஆண் இனங்கள் இனப்பெருக்கம் செய்தல் இப்படியாக பல்வேறு சிறப்புகளையுடைய அரியவகை கடல்வாழ் உயிரினமான கடல் குதிரைகள் பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதை அரசு தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடலமைப்பை பொருத்தவரை நன்கு நீண்டு வளையங்களால் அமைந்தது போன்றும் வாய் நீண்டு குழல் போலவும் மார்புப் பகுதி சற்று அகன்று விரிந்தும் காணப்படுகிறது. உடலில் பக்கவாட்டுக் கோடுகள் மற்றும் நீண்ட புள்ளிகள் தென்படுகின்றன. சுமார் 6 செ.மீ முதல் 17 செ.மீ வரை நீளமும் எடை 4 கிராம் முதல் 14 கிராம் வரையும் இருக்கிறது.
பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை (200) ஆண்களின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 100 வரை இருக்கும்.
பிறக்கும் குஞ்சுகளின் நீளம் ஏறத்தாழ ஒரு செ.மீட்டராக இருந்தாலும் பெற்றோரின் பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும். உலகில் மொத்தம் 35 வகையான கடல் குதிரைகள் காணப்படுகின்றன.
இவை பெரும்பாலும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளான கடற்புற்கள் பவளப்பாறைகள் நிரம்பிய இடங்களில் வாழ்கின்றன இவற்றின் முக்கிய உணவு இறால்களாகும்.
கடல் குதிரைகள் தங்களின் வாலைப் புல்களில் கட்டிக்கொண்டு நிற்க முடியும். இதன் உடல் கடினமான எலும்பு போன்ற பொருள்களினால் ஆன போதிலும் நண்டு பெங்குவின் முதலியன இவற்றை வேட்டையாடி உண்கின்றன.
பெரும்பாலான மீன்கள் கடல் குதிரையைக் கண்டுகொள்வதில்லை.கடல் குதிரைக்குக் கடலில் உள்ள விரோதிகளைக் காட்டிலும் நிலத்தில் உள்ள விரோதியான மனிதன் தான் மிகுந்த தொல்லை கொடுக்கிறான்.
மீன் இனத்தைச் சேர்ந்த உயிரினம்தான் கடல்குதிரை. பார்ப்பதற்கு முதலைக் குட்டியைப் போலிருக்கும். ஆண் கடல் குதிரையின் வாலின் கீழே பை போன்ற அமைப்பு இருக்கும். ஆண் கடல் குதிரைகளின் இந்தப் பையில்தான் பெண் கடல் குதிரைகள் முட்டையிடுகின்றன.
முட்டைகள் பொரிவதும் வெளிவரும் குஞ்சுகள் சிறிது காலம் வளர்வதும் இந்தப் பையில்தான். முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் நேரத்தில் அப்பா கடற்குதிரைக்கு பிரசவ வலி வரும்.
அப்போது அது நீருக்கடியில் உள்ள புதற்களுக்கிடையே கிடந்து மிகவும் சிரமப்படும். உடலை முன்னும் பின்னுமாக அசைத்து வளைக்கும். இப்படி வளையும்போது பையின் தசைகள் விரிவடையும்.
ஒவ்வொரு முறை வளையும்போதும் ஒவ்வொரு குஞ்சு வெளிவரும். இதில் பிரச்சனை என்னவென்றால் கடல்குதிரையின் இனப்பெருக்க வேகம் மிகவும் குறைவு.
மனிதர்களுக்கு வேகத்தைத் தரும் கடல் குதிரைகளுக்குத் தான் வேகம் வருவதில்லை. இப்படியே போனால் எதிர்காலத்தில் கடல் குதிரைகள் என்கிற இனம் என்ன ஆகுமென்று யாருக்கும் தெரியாது.






உறையத்தொடங்கும் கடல் நீரும், விளைவுகளும்...

ஆழமான கடல்நீர்பகுதியானது, உப்புநீர் கரைசலினால் பனிக்கட்டியாக உறையத்தொடங்கும் போது நிகழக்கூடிய மாற்றங்கள் என்ன? கடல் வாழ் உயிரினங்கள் எதிர்நோக்கும் பிரைச்சனைகள் என்ன? அவை எவ்வாறு உயிரிழக்கின்றன?” என்பது பற்றி நேரடியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிபிசி இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
டைம்ஸ் லேப் தொழில்நுட்பத்துடன் படம் பிடிக்க கூடிய விசேட கமராக்களைக்கொண்டு கடலுக்கடியில் 2 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் இவற்றை துல்லியமாக படம் பிடித்துள்ளார்கள். அத்துடன் 6 மணித்தியாலங்களில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்ததாக இதை படம் பிடித்த ஒளிப்பதிவாளர்கள் கூறியுள்ளார்கள்.
‘Brinicle’ Forms எனப்படும் இந்த நிகழ்வினை பிபிசி ஒளிப்பதிவாளர்களான, Hug Miller மற்றும் Doug Anderson ஆகியோர் அண்ட்டார்ட்டிக்கா நிலப்பிரதேசத்தின் Razorkback எனும் தீவின் கடலுக்கடியில் படம் பிடித்துள்ளார்கள்.

உலகின் வயதான நாய் மரணத்தை தழுவியது…!

உலகின் வயதான நாய் ஒன்று மரணத்தை தழுவியுள்ளது. பிறந்து 26 வயதும் ஒன்பது மாதங்களும் ஆகியுள்ள நிலையிலேயே இந்த நாய் மரணத்தை தழுவியுள்ளது.
Pusuke என்று அழைக்கப்படும் இந்த நாய் ஜப்பானிலுள்ள அதன் வீட்டில் நிம்மதியாக மரணமடைந்துள்ளது.
வாழ்ந்து மறைந்த உலகின் பழமையான நாயாக இனம் காணப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நாயின் உரிமையாளரான Yumiko Shinohara கூறியதாவது……..

Pusuke கடந்த திங்கள் கிழமை வரை நல்ல ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தது. பின்னர் மூச்சை இழுத்து சுவாசிக்க போராடியது.
ஜப்பானில் உள்ள Tochigi prefecture என்ற இடத்திலிருந்து உரிமையாளர் வீட்டுக்கு திரும்பிய சில நிமிடங்களில் நாய் இறந்தது.
தான் வீட்டுக்கு வரும் வரை நாய் இறக்காமல் தனக்காக காத்திருந்ததாக அதன் உரிமையாளர் வியப்புடன் தெரிவித்தார்.
ஏற்கனவே அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நாய் ஒன்று 29 வருடங்கள் ஐந்து மாதங்கள் வாழ்ந்து உலகின் வயதான நாயாக மறைந்தது குறிப்பிடத்தக்கது.

70 அடி உயரமான செங்குத்து சுவரில் ஏறிய சீனப் பெண்..!

னாவின் ஜியாங்சு மாகாணத்தில் நான்ஜிங் என்ற பெண் விபரீதமான செயலில் ஈடுபட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கிழக்கு சீனாவில் காணப்படும் 70 அடி உயரமான கோட்டை சுவர் காணப்படுகிறது. இதனை காண்பதற்கு பல நூற்றுக்கணக்காண உல்லாசப்பயணிகள் செல்வது வழக்கம்.
இதற்கான உள்நுழைவு கட்டணமாக £2.50 பவுண்ட் வசூலிக்கப்படுகிறது. இக் கட்டணத்தை செலுத்த முடியாத ஒரு பெண் அங்கு உள்நுழைவதற்காக 70 அடி உயரமான சுவரில் எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் ஏறி அசத்தியுள்ளார்.
இவர் செங்குத்தாக இருக்கும் சுவரில் ஏறுவதை பார்த்து உல்லாசப்பயணிகள் அனைவரும் ஓரிடத்தில் கூடி வேடிக்கைபார்க்கத் தொடங்கியுள்ளார்கள்.
இவர் சிறுவயதில் இருந்தே செங்குத்தான இடங்களில் ஏறும் திறமை கொண்டவர். இவரை சீனாவின் சிலந்திப்பெண் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
 

பீட்ரூட்டின் மருத்துவ குணங்கள்…!

அழகிற நிறம் மற்றும் நிறைய சத்துகளை கொண்ட காய் பீட்ரூட். நிறைய மருத்துவ பயன்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.
2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வடர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.
4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.
5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.
6. இரத்த சோகையை குணப்படுத்தும்.
7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.
8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

அழுத குழந்தையை தூங்க வைக்கும் பூனை…!

ஒரு குழந்தை அழும்போது பூனையொன்று குழந்தையின் தலையில் தட்டி தூங்க வைக்கிறது.
பூனையின் சொந்தக்காரரால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் மிகவும் பிரபல்யம் அடைந்துவருகிறது.
இதன் மூலம் பூனைகளுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு வெளிப்படுகிறது.

அடுத்த வருடம் 203 நாட்களே பாடசாலைகள் நடைபெறும் - கல்வியமைச்சு அறிவிப்பு.......



பாடசாலைகளுக்கான 2012ம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் 203 நாட்கள் நடைபெற வேண்டுமென கல்வி அமைச்சின் செயலாளர் எச்.எம் குணசேகர அறிவித்துள்ளார்.

அத்துடன் அதற்கான தவணைகள் பற்றிய விபரத்தினையும் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான பாடசாலைகளில் முதலாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகள் யாவும் ஜனவரி 2ம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் 5ம் திகதி வரை நடைபெறும். இரண்டாம் தவணை ஏப்ரல் 23ம் திகதி முதல் ஆகஸ்ட் 3ம் திகதி வரையிலும் மூன்றாம் தவணை செப்டெம்பர் 3ம் திகதி முதல் டிசெம்பர் 7ம் திகதி வரையில் நடைபெறும்.

முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகள் யாவும் ஜனவரி 2ம் திகதி முதல் ஏப்ரல் 5ம் திகதி வரையும் இரண்டாம் தவணை ஏப்ரல் 6ம் திகதி முதல் 17ம் திகதி வரையிலும் மூன்றாம் தவணை ஆகஸ்ட் 22ம் திகதி முதல் டிசெம்பர் 7ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

குவைத் இளவரசருக்கு மரண தண்டனை!

சகோதரி மகன்  உறவுமுறையிலுள்ள சக இளவரசர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற குற்றத்துக்காக, குவைத் இளவரசர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.


குவைத் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இளவரசர் ஷேக் ஃபைஸல் அல் அப்துல்லாஹ் அல் சபாஹ் என்கிற அரச குடும்பத்து இளவரசர் தன் சகோதரி மகன் உறவுமுறையிலுள்ள ஷேக் பாசில் சாலிம் சபா அல்சலிம் என்கிற மற்றோர் இளவரசரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக, சட்ட அடிப்படையில் மரண தண்டனை விதித்து இன்று  தீர்ப்பளிக்கப்பட்டது.
குற்றவாளியான இளவரசர் ஷேக் ஃபைஸல் குவைத் இராணுவத்தில் ‘கேப்டன்’ அந்தஸ்தில் பணிபுரிபவர் ஆவார்.
கடந்த 2010 ஜூன்மாதம் கொலையுண்ட ஷேக் பாசிலைக் காண அவரது அரண்மனைக்கு வந்த ஷேக் ஃபைஸல் ‘உன்னிடம் தனியாகப் பேச வேண்டும்’ என்று அவரைச் சற்று வெளியே அழைத்ததாகவும், அதன் பின் ஒருசில நிமிடங்களில் துப்பாக்கி வெடித்த சப்தம் கேட்டு  மற்றவர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது, இரத்தவெள்ளத்தில் ஷேக் பாசில் கிடந்ததாகவும், அவசரமாக முபாரக் அல் கபீர் மருத்துவமனைக்கு அவரை எடுத்துச் சென்றும் பலனின்றிப் போனதாகவும் செய்தி வெளியானது.
அரசில் எந்தப் பொறுப்பும் வகிக்காததால், ஷேக் பாசிலின் கொலைக்கு எந்த அரசியல் காரணமும் இல்லை என்று அரசுத் தரப்பு தெரிவித்திருந்தது.
கொலையுண்ட இளவரசர் ஷேக் பாசில், 1977 வரை குவைத் மன்னராக இருந்த ஷேக் சபாஹ் சாலிம் அல் சபாவுடைய பேரனாவார். அவருடைய தந்தை ஷேக் சாலிம் 1975 வரை அமெரிக்கா, கனடா, வெனிசுலா நாடுகளில் தூதராகப் பொறுப்புவகித்தவர் ஆவார். அதன்பின் நாடு திரும்பி, மந்திரிசபையில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றிருந்தார். எனினும், அண்மையில் உடல்நலக் காரணத்தால் அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டார்.

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்....


நம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.
  வெள்ளைப் பூண்டு:

பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.
 வெங்காயம்:
வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.
கரட்:

நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் ொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது கரட்தான்.
 ஆரஞ்சு :
வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.
  பருப்பு வகைகள் :

பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
கோதுமை ரொட்டி :
நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இறால் மீன் மற்றும் நண்டு :

அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.
    தேநீர் :

தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.
பாலாடைக்கட்டி :
சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.
முட்டைக்கோஸ் :
குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.
மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.

NEW WORLD’S SMALLEST WOMAN FROM INDIA...

NEW WORLD’S SMALLEST WOMAN FROM INDIA:
Guinness World Record Winner

1. Born on 16 December, 1993, in Nagpur Jyoti measures 61.95 cm (2 ft) tall, making her shorter than the average two-year-old child.

2. She weight just 11lb (5 kg).

3. Jyoti is 6.2 cm shorter than the former world's Shortest woman, 22-year old American Bridgette Jordan who stands at 69cm (2 ft 3 in).

4. Jyoti has a form of dwarfism called achondroplasia and will not grow any taller than her current height.

5. Due to her size, all of Jyoti's clothes and jewelry are custom made. Even plates and utensils are specially made, as normal-sized silverware is too big.

6. Jyoti has attended regular school since she was 4 and, other than a small desk and chair, she is treated like any other pupil.

7. Just like most other teenage girls, Jyoti loves fashion, make-up and talking on the phone.

8. Her dream of becoming a Bollywood actress is set to come true next year as she is due to star in two movies in 2012.

9. She is set to release an album with her favorite Bhangra/rap star Mika Singh next year.

10.Despite her tiny stature, Jyoti Amge is not the Shortest woman in history. This title continues to be held by Pauline Musters (Netherlands, 1876-1895) who measured just 61cm (24in)....