செவ்வாய், டிசம்பர் 20

70 அடி உயரமான செங்குத்து சுவரில் ஏறிய சீனப் பெண்..!

னாவின் ஜியாங்சு மாகாணத்தில் நான்ஜிங் என்ற பெண் விபரீதமான செயலில் ஈடுபட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கிழக்கு சீனாவில் காணப்படும் 70 அடி உயரமான கோட்டை சுவர் காணப்படுகிறது. இதனை காண்பதற்கு பல நூற்றுக்கணக்காண உல்லாசப்பயணிகள் செல்வது வழக்கம்.
இதற்கான உள்நுழைவு கட்டணமாக £2.50 பவுண்ட் வசூலிக்கப்படுகிறது. இக் கட்டணத்தை செலுத்த முடியாத ஒரு பெண் அங்கு உள்நுழைவதற்காக 70 அடி உயரமான சுவரில் எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் ஏறி அசத்தியுள்ளார்.
இவர் செங்குத்தாக இருக்கும் சுவரில் ஏறுவதை பார்த்து உல்லாசப்பயணிகள் அனைவரும் ஓரிடத்தில் கூடி வேடிக்கைபார்க்கத் தொடங்கியுள்ளார்கள்.
இவர் சிறுவயதில் இருந்தே செங்குத்தான இடங்களில் ஏறும் திறமை கொண்டவர். இவரை சீனாவின் சிலந்திப்பெண் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
 

கருத்துகள் இல்லை: