வெள்ளி, ஆகஸ்ட் 26

‘கடாபியைக் காட்டிக் கொடுப்பவருக்கு பொதுமன்னிப்பு’.....

லிபியாவின் தலைநகர் திரிபோலியில், கேணல் கடாபியின் தலைமையகத்துக்குள் கிளர்ச்சிப் படையினர் நுழைந்துவிட்ட பின்னரும், அவருக்கு ஆதரவான படையினர் இன்னமும் எதிர்த்தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
அந்தப் பகுதியில் உள்ள கடாபி ஆதரவாளர்களை முற்றாக அழித்து விடுவதற்கு கிளர்ச்சிப் படைகள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்ற நிலையில் அங்கு பலத்த மோதல்கள் நடப்பதாக பிபிசியின் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அருகே வெளளிநாட்டுச் செய்தியாளர்கள் தங்கியுள்ள ஹொட்டல் ஒன்றைச் சுற்றியும் கடுமையான சண்டைகள் நடக்கின்றன. பல வெளிநாட்டுச் செய்தியாளர்கள் அங்கு அகப்பட்டிருக்கிறார்கள்.
அங்கு பல தினங்களாக அகப்பட்டிருந்த பிபிசி குழுவினர் அங்கிருந்து தற்போது வெளியேறியுள்ளனர்.தெற்கு மற்றும் மத்திய அயல் பகுதிகளிலும் மோதல்கள் நடப்பதுடன், அங்கு சட்டம் ஒழுங்கு முற்றாகப் பாதிக்கப்பட்டு விட்டதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
மாவீரர் சதுக்கத்தில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
கடாபியைக் பிடித்துக் கொடுப்பவருக்கு பொதுமன்னிப்பு
இதற்கிடையே, கேணல் கடாபியை யாராவது பிடித்துத் தந்தாலோ அல்லது கொன்றாலோ அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று கிளர்ச்சிக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
அவரைப் பிடித்துக்கொடுப்பவருக்கு பத்து லட்சம் டாலருக்கும் அதிகமான சன்மானத்தை வழங்க ஒரு லிபிய வணிகர் தயாராக இருப்பதாகவும் கிளர்ச்சிப்படையின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கேணல் கடாபி மீண்டும் தாக்குவதை தவிர்ப்பதற்கு, அவரை பிடிப்பது மிகவும் அவசியமானதாகும் என்று முன்னதாக கிளர்ச்சிப்படையினர் கூறியிருந்தனர்.
ஆனால், அவரோ அல்லது அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களோ எங்கு தஞ்சமடைந்திருக்கிறார்கள் என்ற சமிக்ஞை எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
லிபியாவின் எதிர்காலம் குறித்த மாநாடு
அதேவேளை லிபியாவின் எதிர்காலம் குறித்து ஆராய்வதற்காக கிளர்ச்சிக்குழுவின் தேசிய இடைக்கால கவுன்ஸிலின் பிரதிநிதிகள், மேற்கத்தைய மற்றும் அரபு நாடுகளின் பிரதிநிதிகளுடன் கட்டாரில் மாநாடு ஒன்றை நடத்துகிறார்கள்.
தமக்கு உடனடி உதவியாக இரண்டரை பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்று இடைக்கால கவுன்ஸிலும் மூத்த தலைவரான மஃமுட் ஜிப்ரில் கேட்டிருக்கிறார்.
விரைவில் பிரான்ஸ் செல்லவிருக்கும் அவர், உலகெங்கும் முடக்கப்பட்டுள்ள லிபியாவின் 30 பில்லியன் டாலர்களை மீட்டுத் தருமாறு கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரபரப்பை ஏற்படுத்திய பறக்கும் குட்டி தேவதை....

மெக்சிக்கோவின் மேற்கு பகுதயில் பரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:- மெக்சிக்கோவை சேர்ந்த 22 வயதான பெண்மணி யோசி மல்டொனால்டொ என்பவர். இவர் தனது வீட்டில் விசித்திரமான ஒரு உயிரினத்தை கண்டுபிடித்துள்ளார்.
இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில் நான் ஆரம்பத்தில் இந்த உயிரினத்தைப்பார்த்ததும் ஏதோ தும்பி என நினைத்தேன். பின்னர் சற்று உற்றுப்பார்த்ததும் வியப்படைந்து விட்டேன் காரணம் அது ஒரு மூதாட்டி தேவதையாக காணப்பட்டது.
அசையும் என பார்த்த போது அது இறந்த நிலையில் காணப்பட்டது என தெரிவித்தார். இந்த சம்பவம் மெக்சிக்கோ பகுதி எங்கும் காட்டுதீபோல பரவியது.
இதனால் இந்த அதிசயத்தை காண மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளார்கள். இதுவரை 3000 க்கு மேற்பட்வர்கள் இந்த அரிய தேவதையை பார்த்து சென்றுள்ளார்கள்.

மேலும் மக்கள் வந்த வண்ணம் உள்ளதால் யோசி மல்டொனால்டொவின் வீட்டுக்குள் சென்று இந்த அதிசயத்தை பார்க்க ஒரு மணி நேரம் வரிசையில் காத்திருக்க நேரிமுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விசித்திர தேவதையை பார்ப்பதற்கு இறக்கைகளுடளும் மனித முக அமைப்புடனும் சுமார் 2செ.மீற்றர் உயரத்துடன் காணப்படுகிறது.இதைப்பார்வையிட அதிக நேரம் காத்திருக்க வேண்டியேற்படுவதால் அப்பகுதியில் இதனை புகைப்படம் எடுத்துவ விற்பனை செய்த வருகிறார்கள். மற்றும் இவரின் வீட்டிற்கு அருகில் குளிர்பாணம் சிற்றுண்டி என்பனவும் விசேசமாக விற்கப்படுகிறதாம்.

இரு கால்களாலும் சைக்களில் ரயர்களுக்கு பஞ்சர் போடும் மனிதன்....

சீனாவில் ஒருவர் தனது கால்களால் வேலை செய்கிறார். இவருக்கு ஒரு கை முழுமையாக இல்லை.இன்னொரு கை ஊனமாக உள்ளது. ஆனாலும் உழைத்து வாழ வேண்டும் என்ற வைராக்கியத்தோடு வாழ்க்கை நடத்தி வருகிறார் இந்த மனிதர்.
இவர் கால்களாலேயே உழைப்பு நடாத்தி வருகிறார். இவர் சைக்களில் ரயர்களுக்கு பஞ்சர் போடும் தொழிலை செய்கிறார். கைகளால் பஞ்சர் போடுவது என்பதே சற்று கடினமான விடயம்தான் இவரோ தனது இரு கால்களாலும் தன்னிடம் வரும் வாடிக்கையார்களின் சைக்கிள்களுக்கு பஞ்சர் போட்டு கொடுக்கிறார்.
இரு கைகளையும் வைத்துக்கொண்டே நாம் வேலைக்கு சென்று சம்பாதிக்க கஸ்ரப்படுகிறோம். அனால் இவர் கைகளே இல்லாமல் கால்களால் வேலை செய்கிறார்.

தலையணையை திருமணம் செய்த இளைஞர். ....

ஜப்பானை சேர்ந்தவர் லீஜின்காய் என்ற இளைஞர். இவரின் வயது 28. இவர் அவருடைய தலையணையின் மீதான அதிக காதலால் அந்த தலையணையை திருமணம் செய்துள்ளார்.
இந்த தலையணையின் பெயர் “டாகிமாகுரோ” ஆகும்.

உங்கள் உதடுகளை அழகாக்க தற்காலிக உதடுகள்.....

வயலன்ட் லிப்ஸ் எனப்படும் கம்பெனி ஒன்றினால் புதிய பெஷன் தற்காலிக உதடுகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக உதடுகளை உங்களுடைய உதடுகளுக்கு ஏற்ற அளவுகளில் வெட்டி ஒட்டிக் கொள்ளலாம். அதன் மேல் உங்கள் விருப்பப் படி கலை வண்ணம் படைக்கலாம்.
நிங்கள் விரும்பிய வடிவங்களில் உதடுகளை உருவாக்கலாம். இதை பாவித்து உங்கள் உதடுகளை நிங்களே அழகு படுத்திக் கொள்ளுங்கள்.

சூரிய சக்தி (சோலார்) நாற்காலி.....

புதிய சூரிய சக்தி (சோலார்) நாற்காலி ஒன்றினை அறிமுகப் படுத்தியுள்ளனர்.

சுடும் வெயிலில் சுற்றுப்புறச் சூழலில் நிங்கள் உங்கள் நேரத்தை செலவிடலாம். புதிய சூரிய சக்தி (சோலார்) நாற்காலி சூரிய ஒளியைப் பெற்றுக்கொள்ள உங்களுக்கு உதவப்போகிறது.
நிங்கள் சூரிய ஒளியில் இருந்த படியே உங்கள் மின்னணுவியல் சாதனங்களுக்கு மின்னூட்டம் (சார்ஜ்) செய்து கொள்ளவும் முடியும். இதனைக்கொண்டு உங்கள் iphone இற்கு கூட சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும்.

35 கோடி செலவில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் கனவு இல்லம்.....

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 35 கோடிக்கு அவருடைய கனவு இல்லத்தை வாங்கியுள்ளார்.

இவரின் இக் கனவு இல்லம் மும்பையில் மேற்கு பாந்திராவில் உள்ளது. சச்சின் டெண்டுல்கரின் இந்த இல்லம் 10000 சதுரடி பரப்பளவை கொண்டதாகும்.
இதே போன்ற ஒரு வீடு முதன் முதலில் மெக்சிகோவில் வடிவமைக்கப்பட்டது. ஜாவியர் செநோசியின் என்பவரால் அவ் வீடு வடிவமைக்கப்பட்டது. இவர் உலகப்புகழ் பெற்ற கட்டிடக்கலை வடிவமைப்பாளர் ஆவார்