வெள்ளி, ஆகஸ்ட் 26

உலகின் மிக உயரமான புதிய கட்டிடம்.....சவுதி அரேபியாவினால் உலகின் மிக உயரமான புதிய கட்டிடம், நிர்மாணிக்கப்படவிருக்கிறது. 1.2 பில்லியன்.
2008 இல் இதற்கான திட்டப்பணிகள் முன்னெடுக்க தொடங்கப்பட்ட போதும், தற்போது இக்கட்டிடத்துக்கான முழு வடிவமைப்பும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி பின்லேடன் குரூப் கட்டிட நிர்மாண பொறுப்பை ஏற்றுள்ளது. தற்போது உலகின் உயரமான கட்டிடங்களாக திகழும் டுபாயின் பூர்ஜ் கலிஃபியா மற்றும் நியூயோர்க்கின் சுதந்திர கோபுரம் என்பவற்றை விட இக்கட்டிடயம் உயரமாக அமைக்கப்படவிருப்பது உறுதியாகியுள்ளது.

மீசை முளைத்த குதிரை.....

பிருத்தானியாவில் உள்ள அல்பி எனும் பெயர் கொண்ட இக் குதிரையே மீசையுடன் கம்பீரமாக உலா வருகிறது. இது பற்றி விலங்கியல் நிபுணர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், வழமையில் குதிரைகளுக்கு வாயின் மேல் பகுதியில் முடி வளர்வதாகவும், ஆனால் குதிரைகள் தமது வாய் பற்கள் மூலம் அம் முடிகளை அகற்றுவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் அல்பி அவ்வாறு அகற்றாமல் அதனை விருப்புடன் வளர்த்து வருவது தன்னை ஆச்சரியப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

தங்க நிறத்தில் சுமார் 7 இஞ் வளர்ந்துள்ள இம் மீசையுடன் அல்பி யை பார்வையிட பலர் ஆவலுடன் வந்து செல்கின்றனர்.

இப்படியும் ஒரு சாதனை படைத்த மனிதன்!!!!

சீனாவைச்சேர்ந்த Saimaiti Aishan எனப்படும்
27 வயது நபர் , சுமார் 100 அடி 
உயரத்தில் நிற்கும் ஒரு பரசூட்டில்
இருந்து மற்றொரு பரசூட்டுக்கு
கம்பி மூலம் இடம் மாறி சாதனை
படைத்துள்ளார்.

அற்புதமான i Phone உறை....

தனிமையில் வாடுபவர்களுக்காகவே இந்த கை இணைக்கப்பட்ட iPhone உறை தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது யப்பானின் டோக்கியோவில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது இந்த கை இணைக்கப்பட்ட போன் உறை.
ஐபோன் 4 இல் பயன்படுத்தத்தக்க வகையில் இது ஆக்கப்பட்டுள்ளது.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இது நிஜக் கைகளின் அளவிலேயே ஆக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொட்டு உணரும் போது ஓர் நிஜக் கையை ஸ்பர்சிக்கும் உணர்வே ஏற்படுகிறது.
ஆண்,பெண், குழந்தையின் கை வடிவங்களில் வெளிவந்துள்ள இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனைப் பயன்படுத்துவோர், இந்த உறையில் இணைக்கப்பட்ட கையுடன் கைகோர்த்து பிடித்தமானவர்களுடன் பேசுகையில் அவர்களின் அருகில் இருப்பது போல தாம் உணர்வதாக தெரிவித்தனர்.
இதன் தயாரிப்பாளர், தனிமையில் வாடுபவர்கள் தாம் பிரிந்திருக்கும் உறவுகளுடன் இந்த உறை இணைக்கப்பட்ட போனில் பேசும் போது தனிமை மறந்து உல்லாசமாக இருப்பதற்காகவே இந்தத் தயாரிப்பு தயாரிக்கப்படுவதாக தெரிவித்தார்.
இதன் சந்தைப்பெறுமதி 65 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

உலகில் மிகவும் வேகமாக ஓடக் கூடிய கார்...!!

உலகில் மிகவும் வேகமாக ஓடக் கூடிய கார் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதனை டொம் கார்ட்லி நிறுவனம் தயாரித்துள்ளது.
டொம் கார்ட்லி நிறுவனத்தின் சொங் நொய்ர் மொடல் காரே உலகில் வேகமான காராக விளங்குகிறது.
இந்த கார் மணிக்கு கு 268 மைல் வேகத்தில் செல்லக் கூடியது. ஐந்தில் 30 கார்கள் மட்டுமே சந்தைக்காக தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த காரின் விலை 3.43 அமெரிக்க டொலர்களாகும்.


சீனாவின் மூன்று வயதுடைய குழந்தை 60 கிலோ கிராம் எடையுடன் காணப்படுகிறது..!!!!!

சீனாவில் உள்ள மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று 60 கிலோ கிராம் எடையுடன் காணப்படுகிறது. இந்த ஆண் குழந்தையின் பெயர் லூகோ.
இந்த வயதுடைய சாதாரண குழந்தைகளின் எடையை விட லூகோ 5 மடங்கு அதிக எடையுடன் காணப்படுகிறான்.
இவன் பாலர் பாடசாலையில் படித்து வருகிறான். ஆனால் அங்கேயுள்ள ஏனைய மாணவர்கள் லூகோவை பார்த்து பயப்படுவதால் வீட்டிலேயே தனியாக விளையாடுகிறான்.
மேலும் இவனுக்கு அதிகம் பசி எடுக்கிறதாம். இதனால் ஏதாவது உண்ணக் கொடுக்காவிடின் தொடர்ந்து அழுவதாக லூகோவின் தாயார் கூறுகிறார்.

சுமார் 1.77 தொன் நிறை கொண்ட இராட்சத சுறாவை கறியாக்கிய ஹோட்டல் உரிமையாளர்..!!!

சீனாவின் சினியாங் பகுதியில் உள்ள வன்சி போர்ட் என்ற உணவகத்தின் உரிமையாளர் சயோ யன்சியாங்.
இவர் அண்மையில் மீனவர்களால் பிடிக்கப்பட்ட இராட்சத சுறாவை தனது உணவகத்திற்கு வாங்கி வந்துள்ளார். இந்த சுறாவை அவர் 1000 பவுன்ஸ்கள் கொடுத்து வாங்கியுள்ளார்.

இந்த சுறா 5.8 மீற்ரர்கள் நீளமும், 3 மீற்ரர்கள் அகலமும் சுமார் 1.77 தொன் நிறையும் கொண்டது. இந்த சுறாவை அவர் லொறியில் ஏற்றி உணவகத்திற்கு கொண்டு வந்துள்ளார். பின்னர் வேலை செய்யும் 50 இற்கும் மேற்பட்டோரின் உதவியால் சமையலறைக்கு இழுத்துக் கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் பெரும் முயற்சியால் அந்த சுறா கறியாக்கப்பட்டது.

மூளை இல்லாமல் தவளையின் முகத்தோற்றத்துடன் பிறந்த குழந்தை…..!!

நைஜீரியாவில் லைன் எகிட்டி பொது மருத்துவமனையில் பிரசவத்துக்காக நடுத்தர வயது தாயொருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு மூளை இல்லாமல் தவளையின் முகத்தோற்றத்துடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்தத் தகவலை மருத்துவமனை நிர்வாக இயக்குனர் Dr.வோல் ஒலுகோஜி உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் அவர் இது குறித்து கூறுகையில்…..இவருக்கு பிரசவம் தாமதமானது. அதனால் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டது. பிறக்கும் போது அந்த குழந்தை மூளை இல்லாமல் பிறந்துள்ளது. அத்துடன் தலையில் மூளைக்குப் பதிலாக குழி காணப்பட்டதாக அவர் கூறினார்.
இந்தக் குழந்தை கருவில் உருவாகும் போதே மூளை உருவாகவில்லை என நிபுணர்கள்

வளையல்களை கையில் போடுவதற்கு இடமில்லாமல் கழுத்தில் மாலையாக போட்ட மணப்பெண்…!!!!

சீனாவில் அண்மையில் செல்வந்த பெண்ணொருவருக்கு திருமணம் நடைபெற்றது. இத் திருமணத்தின் போது அந்த மணப்பெண் தன்னிடம் இருந்த பெருந் தொகையான தங்க நகைகளை அணிந்துள்ளார்.

அப்போது தங்க வளையல்களை கையில் போடுவதற்கு இடமின்றி அவற்றை தங்க சங்கிலியில் கோர்த்து மாலையாக அணிந்திருந்தார்.

நாளுக்கு நாள் தங்க நகைகளின் விலை கூடிக் கொண்டு போகிறது. பலருக்கு தங்க நகைகள் அணிவதே எட்டாக் கனியாகி விட்டது. ஆனால் இந்த மணப் பெண்ணோ நகைகளை போடுவதற்கு இடமில்லாமல் தவிக்கிறார்.

வேற்றுக்கிரகத்தில் இருந்து பூமியை வந்தடைந்த பனிக் கோளம்..!!!!

செக் குடியரசு நாட்டில் மில்லொவைஸ் காட்டில் சேற்றுப்பகுதியில் பனிக் கோளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல கோடுகளுடன் இந்த பனிக் கோளம் காணப்படுகிறது.

அத்துடன் இந்த பனிக் கோளம் நீண்ட நேரத்துக்கு உருகாமல் அப்படியே உள்ளது.UFO (unidentified flying object) இதனை ஆராட்சி செய்துள்ளது. இந்த ஆராட்சி முடிவுகளின் படி இந்த பனிக் கோளம் பூமிக்கு சொந்தமானது இல்லை எனத் தெரியவந்துள்ளது. அத்துடன் இது விண்வெளிக்கு அப்பால் இருந்து பூமியில் விழுந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

உலகின் சிறிய அசையும் படிக்கட்டு – வீடியோ இணைப்பு..!!!!!

உலகிலேயே சிறிய அசையும் படிக்கட்டை உருவாக்கியுள்ளனர். இதனை கவசாகி நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த அசையும் படிக்கட்டு யப்பானில் உள்ள ஓர் அங்காடியில் பொருத்தப்படுள்ளது.
இந்த அசையும் படிக்கட்டானது வெறும் ஐந்து படிக்கட்டுக்களை மட்டுமே கொண்டுள்ளது. இவ் அசையும் படிக்கட்டு கால் வலு குறைந்தவர்களின் பயன்பாட்டுக்கு பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அசையும் படிக்கட்டானது உலகிலேயே சிறிய அசையும் படிக்கட்டு என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘கடாபியைக் காட்டிக் கொடுப்பவருக்கு பொதுமன்னிப்பு’.....

லிபியாவின் தலைநகர் திரிபோலியில், கேணல் கடாபியின் தலைமையகத்துக்குள் கிளர்ச்சிப் படையினர் நுழைந்துவிட்ட பின்னரும், அவருக்கு ஆதரவான படையினர் இன்னமும் எதிர்த்தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
அந்தப் பகுதியில் உள்ள கடாபி ஆதரவாளர்களை முற்றாக அழித்து விடுவதற்கு கிளர்ச்சிப் படைகள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்ற நிலையில் அங்கு பலத்த மோதல்கள் நடப்பதாக பிபிசியின் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அருகே வெளளிநாட்டுச் செய்தியாளர்கள் தங்கியுள்ள ஹொட்டல் ஒன்றைச் சுற்றியும் கடுமையான சண்டைகள் நடக்கின்றன. பல வெளிநாட்டுச் செய்தியாளர்கள் அங்கு அகப்பட்டிருக்கிறார்கள்.
அங்கு பல தினங்களாக அகப்பட்டிருந்த பிபிசி குழுவினர் அங்கிருந்து தற்போது வெளியேறியுள்ளனர்.தெற்கு மற்றும் மத்திய அயல் பகுதிகளிலும் மோதல்கள் நடப்பதுடன், அங்கு சட்டம் ஒழுங்கு முற்றாகப் பாதிக்கப்பட்டு விட்டதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
மாவீரர் சதுக்கத்தில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
கடாபியைக் பிடித்துக் கொடுப்பவருக்கு பொதுமன்னிப்பு
இதற்கிடையே, கேணல் கடாபியை யாராவது பிடித்துத் தந்தாலோ அல்லது கொன்றாலோ அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று கிளர்ச்சிக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
அவரைப் பிடித்துக்கொடுப்பவருக்கு பத்து லட்சம் டாலருக்கும் அதிகமான சன்மானத்தை வழங்க ஒரு லிபிய வணிகர் தயாராக இருப்பதாகவும் கிளர்ச்சிப்படையின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கேணல் கடாபி மீண்டும் தாக்குவதை தவிர்ப்பதற்கு, அவரை பிடிப்பது மிகவும் அவசியமானதாகும் என்று முன்னதாக கிளர்ச்சிப்படையினர் கூறியிருந்தனர்.
ஆனால், அவரோ அல்லது அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களோ எங்கு தஞ்சமடைந்திருக்கிறார்கள் என்ற சமிக்ஞை எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
லிபியாவின் எதிர்காலம் குறித்த மாநாடு
அதேவேளை லிபியாவின் எதிர்காலம் குறித்து ஆராய்வதற்காக கிளர்ச்சிக்குழுவின் தேசிய இடைக்கால கவுன்ஸிலின் பிரதிநிதிகள், மேற்கத்தைய மற்றும் அரபு நாடுகளின் பிரதிநிதிகளுடன் கட்டாரில் மாநாடு ஒன்றை நடத்துகிறார்கள்.
தமக்கு உடனடி உதவியாக இரண்டரை பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்று இடைக்கால கவுன்ஸிலும் மூத்த தலைவரான மஃமுட் ஜிப்ரில் கேட்டிருக்கிறார்.
விரைவில் பிரான்ஸ் செல்லவிருக்கும் அவர், உலகெங்கும் முடக்கப்பட்டுள்ள லிபியாவின் 30 பில்லியன் டாலர்களை மீட்டுத் தருமாறு கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரபரப்பை ஏற்படுத்திய பறக்கும் குட்டி தேவதை....

மெக்சிக்கோவின் மேற்கு பகுதயில் பரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:- மெக்சிக்கோவை சேர்ந்த 22 வயதான பெண்மணி யோசி மல்டொனால்டொ என்பவர். இவர் தனது வீட்டில் விசித்திரமான ஒரு உயிரினத்தை கண்டுபிடித்துள்ளார்.
இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில் நான் ஆரம்பத்தில் இந்த உயிரினத்தைப்பார்த்ததும் ஏதோ தும்பி என நினைத்தேன். பின்னர் சற்று உற்றுப்பார்த்ததும் வியப்படைந்து விட்டேன் காரணம் அது ஒரு மூதாட்டி தேவதையாக காணப்பட்டது.
அசையும் என பார்த்த போது அது இறந்த நிலையில் காணப்பட்டது என தெரிவித்தார். இந்த சம்பவம் மெக்சிக்கோ பகுதி எங்கும் காட்டுதீபோல பரவியது.
இதனால் இந்த அதிசயத்தை காண மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளார்கள். இதுவரை 3000 க்கு மேற்பட்வர்கள் இந்த அரிய தேவதையை பார்த்து சென்றுள்ளார்கள்.

மேலும் மக்கள் வந்த வண்ணம் உள்ளதால் யோசி மல்டொனால்டொவின் வீட்டுக்குள் சென்று இந்த அதிசயத்தை பார்க்க ஒரு மணி நேரம் வரிசையில் காத்திருக்க நேரிமுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விசித்திர தேவதையை பார்ப்பதற்கு இறக்கைகளுடளும் மனித முக அமைப்புடனும் சுமார் 2செ.மீற்றர் உயரத்துடன் காணப்படுகிறது.இதைப்பார்வையிட அதிக நேரம் காத்திருக்க வேண்டியேற்படுவதால் அப்பகுதியில் இதனை புகைப்படம் எடுத்துவ விற்பனை செய்த வருகிறார்கள். மற்றும் இவரின் வீட்டிற்கு அருகில் குளிர்பாணம் சிற்றுண்டி என்பனவும் விசேசமாக விற்கப்படுகிறதாம்.

இரு கால்களாலும் சைக்களில் ரயர்களுக்கு பஞ்சர் போடும் மனிதன்....

சீனாவில் ஒருவர் தனது கால்களால் வேலை செய்கிறார். இவருக்கு ஒரு கை முழுமையாக இல்லை.இன்னொரு கை ஊனமாக உள்ளது. ஆனாலும் உழைத்து வாழ வேண்டும் என்ற வைராக்கியத்தோடு வாழ்க்கை நடத்தி வருகிறார் இந்த மனிதர்.
இவர் கால்களாலேயே உழைப்பு நடாத்தி வருகிறார். இவர் சைக்களில் ரயர்களுக்கு பஞ்சர் போடும் தொழிலை செய்கிறார். கைகளால் பஞ்சர் போடுவது என்பதே சற்று கடினமான விடயம்தான் இவரோ தனது இரு கால்களாலும் தன்னிடம் வரும் வாடிக்கையார்களின் சைக்கிள்களுக்கு பஞ்சர் போட்டு கொடுக்கிறார்.
இரு கைகளையும் வைத்துக்கொண்டே நாம் வேலைக்கு சென்று சம்பாதிக்க கஸ்ரப்படுகிறோம். அனால் இவர் கைகளே இல்லாமல் கால்களால் வேலை செய்கிறார்.

தலையணையை திருமணம் செய்த இளைஞர். ....

ஜப்பானை சேர்ந்தவர் லீஜின்காய் என்ற இளைஞர். இவரின் வயது 28. இவர் அவருடைய தலையணையின் மீதான அதிக காதலால் அந்த தலையணையை திருமணம் செய்துள்ளார்.
இந்த தலையணையின் பெயர் “டாகிமாகுரோ” ஆகும்.

உங்கள் உதடுகளை அழகாக்க தற்காலிக உதடுகள்.....

வயலன்ட் லிப்ஸ் எனப்படும் கம்பெனி ஒன்றினால் புதிய பெஷன் தற்காலிக உதடுகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக உதடுகளை உங்களுடைய உதடுகளுக்கு ஏற்ற அளவுகளில் வெட்டி ஒட்டிக் கொள்ளலாம். அதன் மேல் உங்கள் விருப்பப் படி கலை வண்ணம் படைக்கலாம்.
நிங்கள் விரும்பிய வடிவங்களில் உதடுகளை உருவாக்கலாம். இதை பாவித்து உங்கள் உதடுகளை நிங்களே அழகு படுத்திக் கொள்ளுங்கள்.

சூரிய சக்தி (சோலார்) நாற்காலி.....

புதிய சூரிய சக்தி (சோலார்) நாற்காலி ஒன்றினை அறிமுகப் படுத்தியுள்ளனர்.

சுடும் வெயிலில் சுற்றுப்புறச் சூழலில் நிங்கள் உங்கள் நேரத்தை செலவிடலாம். புதிய சூரிய சக்தி (சோலார்) நாற்காலி சூரிய ஒளியைப் பெற்றுக்கொள்ள உங்களுக்கு உதவப்போகிறது.
நிங்கள் சூரிய ஒளியில் இருந்த படியே உங்கள் மின்னணுவியல் சாதனங்களுக்கு மின்னூட்டம் (சார்ஜ்) செய்து கொள்ளவும் முடியும். இதனைக்கொண்டு உங்கள் iphone இற்கு கூட சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும்.

35 கோடி செலவில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் கனவு இல்லம்.....

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 35 கோடிக்கு அவருடைய கனவு இல்லத்தை வாங்கியுள்ளார்.

இவரின் இக் கனவு இல்லம் மும்பையில் மேற்கு பாந்திராவில் உள்ளது. சச்சின் டெண்டுல்கரின் இந்த இல்லம் 10000 சதுரடி பரப்பளவை கொண்டதாகும்.
இதே போன்ற ஒரு வீடு முதன் முதலில் மெக்சிகோவில் வடிவமைக்கப்பட்டது. ஜாவியர் செநோசியின் என்பவரால் அவ் வீடு வடிவமைக்கப்பட்டது. இவர் உலகப்புகழ் பெற்ற கட்டிடக்கலை வடிவமைப்பாளர் ஆவார்