வெள்ளி, ஆகஸ்ட் 26

சைக்கிளே பூட்டாக மாறும் புதிய வகை சைக்கிள்......

பிரிட்டனை சேர்ந்த கெவின் ஸ்கொட் என்பவர் புதிய வகை சைக்கிளை வடிவமைத்துள்ளார்.

இதுவரை நீங்கள் எத்தனையோ விதமான சைக்கிள்களை எல்லாம் பார்த்திருப்பிர்கள். ஆனால் இப்படிப்பட்ட சைக்கிளை பார்த்திருக்கவே முடியாது. நிங்கள் பார்த்த சைக்கிள்கள் அனைத்திற்கும் பூட்டு இருந்திருக்கும்.
ஆனால் இந்த சைக்கிளை பொறுத்தவரை பூட்டு அவசியம் இல்லை. ஏனென்றால் இந்த சைக்கிளையே பூட்டாக மாற்ற முடியும்.
சைக்கிளையே வளைத்து பூட்டு போடக் கூடியவாறு இச் சைக்கிளை வடிவமைத்துள்ளார் கெவின் ஸ்கொட்.

கின்னஸ் சாதனை படைத்த மின்னணு ஓவியம்...

மின்னணு ஓவியம் உலகின் மிகப்பெரிய ஓவியம் என்ற பெயரை பெற்றுள்ளது. இவ் மின்னணு ஓவியத்திற்கு “ச்ப்லேண்டிட் சென்ட்ரல் ப்லைன்ஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ஓவியம் 120 மீட்டர் நீளமும் 20 மீட்டர் உயரமும் கொண்டதாகும். இவ் ஓவியம் உலகின் மிகப் பெரிய ஓவியம் என கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

இருதய மாற்று அறுவை சிகிச்சைகளின் போது பயன்படும் தேள்களின் கொடுக்குகள் ....

தேள் கொடுக்ககளிலிருந்து பெறப்படும் பதார்த்தங்களை இருதய மாற்று அறுவை சிகிச்சைகளின் போது பயன்படுத்த முடியும். இருதய மாற்று அறுவைச் சிகிச்சைகள் தோல்வியடையாமல் இருப்பதற்காக தேளின் கொடுக்குகளில் இருந்து பெறப்படும் ஒரு பொருளை மருத்துவர்கள் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய அமெரிக்க காடுகளில் உள்ள தேள் வகையொன்றின் தொடுக்கிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பதார்த்தம் இருதய மாற்று அறுவைச் சிகிச்சைகளின் போது மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.


மத்திய அமெரிக்க காடுகளில் காணப்படும் தேள் வகைகள் 5 முதல் 8 சென்றி மீற்றர் வரையில் வளரும். தேள்களின் ஆயுட்காலம் 4 முதல் 25 ஆண்டுகள் ஆகும்.

இருதய மாற்று அறுவை சிகிச்சைகளின் போது இரத்த கலன்கள் மற்றும் திசுக்களில் பாரிய பதிப்புக்கள் ஏற்படும். இத் தேள் வகையிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் பதார்த்தம் இதற்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

மிருகங்களை வேட்டையாடி உண்ணும் முதலை....

முதலை என்றாலே அனைவருக்கும் பயம் வருவது வழமையே. முதலை மிகவும் பலமான மிருகம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவை நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்டது. இப்படி வாழும் முதலை தனது பசிக்கு எவ்வாறு மிருகங்களை வேட்டையாடி உண்கின்றது என்பதை பார்க்கலாம்.

விரல் வடிவில் சோப் [சவர்க்காரம்] ......

இதை பார்த்தல் உங்களுக்கு உண்மையான விரல்கள் மாதிரி இருக்கும். ஆனால் இவைகள் விரல்கள் இல்லை.
இவை சோப் (சவர்க்காரம்) இது நல்ல வாசனையாகவும் இருக்கும். இதை உங்கள் தேவைக்கு பாவிக்கலாம். அல்லது யாருக்காவது பரிசாகவும் கொடுக்கலாம்.

சாக்லேட் மூலம் தயாரிக்கப்பட்ட ஆடைகள்....

பேஷன்கள் பல வகையில் நடைபெறுவதுண்டு. பேஷன் சோ பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பல பேஷன் சோக்களில் ஆடைகள் பல விதமாக இருக்கும்.
ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொரு ஆடைகளில் வருவார்கள். ஆனால் இங்கே ஒரு பேஷன் சோவில் ஒவ்வொரு பெண்கள் அணிந்துள்ள ஆடைகளும் சாப்பிடக் கூடிய சாக்லேட் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆடைகள் எல்லாம் சாப்பிடலாம். படத்தில் இருக்கிற பெண்களும் அழகா இருக்கிறார்கள். அவர்கள் அணிந்துள்ள ஆடைகளும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

வீதியில் செல்வோரை கவரும் பெண்கள்....

பல பெண்கள் உடம்பை வளைப்பதே இல்லை. இங்கே உள்ள பெண்களை பாருங்கள் எப்படி எல்லாம் வளைந்து கொடுக்கிறார்கள் என்று.
இவர்கள் ராபிக் சிக்னல், தரிப்பிடங்கள் போன்ற இடங்களில் இவ்வாறு செய்கின்றனர்.
வீதியில் செல்வோருக்கு இவர்களை ரசிப்பதே தனி கலை என்று சொல்லலாம். இந்த படங்களை நீங்களே பாருங்கள்.