செவ்வாய், டிசம்பர் 20

அலைகளால் உருவான அதிசயக் குகை..! (படங்கள் இணைப்பு)

இயற்கையின் அரிய சில செயற்பாடுகள் மனித நடத்தை மற்றும் உலக அமைப்பில் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
அதேபோல் தான் பூமியின் வடிவமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் விஞ்ஞானிகளாலும் புவியலாளர்களாலும் நோக்கத் தக்கவையாக அமைகின்றன.
எனினும் புவி மேற்பரப்பில் நிகழும் ரசிக்கத்தக்க மாற்றங்கள் சாதாரண மனிதனையும் திரும்பி பார்க்க வைக்கின்றன.
அவ்வாறான ஒரு மாற்றம் தான் இங்கும் நிகழ்ந்திருக்கிறது. மில்லியன் கணக்கான வருடங்களாக ஏற்பட்ட அலைஅரிப்புகளால் அதிசய உலகங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன.
இதனால் 70மீ. ஆழமான குகைகள்கூட ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் Belize நாட்டின் Great Blue Hole என்ற குகைக்குள் 407அடி ஆழத்திற்குள்கூட சுழியோடிகளால் போகமுடியும்.
                                            Belize இன் Great Blue Hole குகை. புகழ்பெற்ற ஸ்கியூபா சுழியோடலிற்கான இடம்.!

                                                                              கலிபோர்னியாவிலுள்ள நீரடிக் குகை

                                                     விஸ்கொன்சின் சுப்பீரியர் ஏரியிலுள்ள Apostle Islands பனிக்குகை.

             சாடினியாவிலுள்ள Belvedere குகை – இந்தக் குகையினை கடல் தெய்வமான நெப்ரியூனின் வீடெனக் கூறுகின்றனர்.

Oregon பகுதியிலுள்ள Sea Lion Cave என்ற குகை உலகின் நீரடிக் குகைகளில் மிகவும் பெரியதாகும். இங்கு கடற்சிங்கங்கள் உட்பட பலதரப்பட்ட உயிர்கள் வாழ்கின்றன.

                                       அயர்லாந்திலுள்ள Giant’s Causeway. இதுவும் ஸ்கொட்லாந்தை ஒத்தவடிவக் குகைதான்.

                                                                               ஸ்கொட்லாந்திலுள்ள Fingal குகை.

கருத்துகள் இல்லை: