செவ்வாய், டிசம்பர் 20

உலகின் வயதான நாய் மரணத்தை தழுவியது…!

உலகின் வயதான நாய் ஒன்று மரணத்தை தழுவியுள்ளது. பிறந்து 26 வயதும் ஒன்பது மாதங்களும் ஆகியுள்ள நிலையிலேயே இந்த நாய் மரணத்தை தழுவியுள்ளது.
Pusuke என்று அழைக்கப்படும் இந்த நாய் ஜப்பானிலுள்ள அதன் வீட்டில் நிம்மதியாக மரணமடைந்துள்ளது.
வாழ்ந்து மறைந்த உலகின் பழமையான நாயாக இனம் காணப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நாயின் உரிமையாளரான Yumiko Shinohara கூறியதாவது……..

Pusuke கடந்த திங்கள் கிழமை வரை நல்ல ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தது. பின்னர் மூச்சை இழுத்து சுவாசிக்க போராடியது.
ஜப்பானில் உள்ள Tochigi prefecture என்ற இடத்திலிருந்து உரிமையாளர் வீட்டுக்கு திரும்பிய சில நிமிடங்களில் நாய் இறந்தது.
தான் வீட்டுக்கு வரும் வரை நாய் இறக்காமல் தனக்காக காத்திருந்ததாக அதன் உரிமையாளர் வியப்புடன் தெரிவித்தார்.
ஏற்கனவே அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நாய் ஒன்று 29 வருடங்கள் ஐந்து மாதங்கள் வாழ்ந்து உலகின் வயதான நாயாக மறைந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: