வெள்ளி, ஆகஸ்ட் 26

உலகில் மிகவும் வேகமாக ஓடக் கூடிய கார்...!!

உலகில் மிகவும் வேகமாக ஓடக் கூடிய கார் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதனை டொம் கார்ட்லி நிறுவனம் தயாரித்துள்ளது.
டொம் கார்ட்லி நிறுவனத்தின் சொங் நொய்ர் மொடல் காரே உலகில் வேகமான காராக விளங்குகிறது.
இந்த கார் மணிக்கு கு 268 மைல் வேகத்தில் செல்லக் கூடியது. ஐந்தில் 30 கார்கள் மட்டுமே சந்தைக்காக தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த காரின் விலை 3.43 அமெரிக்க டொலர்களாகும்.


சீனாவின் மூன்று வயதுடைய குழந்தை 60 கிலோ கிராம் எடையுடன் காணப்படுகிறது..!!!!!

சீனாவில் உள்ள மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று 60 கிலோ கிராம் எடையுடன் காணப்படுகிறது. இந்த ஆண் குழந்தையின் பெயர் லூகோ.
இந்த வயதுடைய சாதாரண குழந்தைகளின் எடையை விட லூகோ 5 மடங்கு அதிக எடையுடன் காணப்படுகிறான்.
இவன் பாலர் பாடசாலையில் படித்து வருகிறான். ஆனால் அங்கேயுள்ள ஏனைய மாணவர்கள் லூகோவை பார்த்து பயப்படுவதால் வீட்டிலேயே தனியாக விளையாடுகிறான்.
மேலும் இவனுக்கு அதிகம் பசி எடுக்கிறதாம். இதனால் ஏதாவது உண்ணக் கொடுக்காவிடின் தொடர்ந்து அழுவதாக லூகோவின் தாயார் கூறுகிறார்.

சுமார் 1.77 தொன் நிறை கொண்ட இராட்சத சுறாவை கறியாக்கிய ஹோட்டல் உரிமையாளர்..!!!

சீனாவின் சினியாங் பகுதியில் உள்ள வன்சி போர்ட் என்ற உணவகத்தின் உரிமையாளர் சயோ யன்சியாங்.
இவர் அண்மையில் மீனவர்களால் பிடிக்கப்பட்ட இராட்சத சுறாவை தனது உணவகத்திற்கு வாங்கி வந்துள்ளார். இந்த சுறாவை அவர் 1000 பவுன்ஸ்கள் கொடுத்து வாங்கியுள்ளார்.

இந்த சுறா 5.8 மீற்ரர்கள் நீளமும், 3 மீற்ரர்கள் அகலமும் சுமார் 1.77 தொன் நிறையும் கொண்டது. இந்த சுறாவை அவர் லொறியில் ஏற்றி உணவகத்திற்கு கொண்டு வந்துள்ளார். பின்னர் வேலை செய்யும் 50 இற்கும் மேற்பட்டோரின் உதவியால் சமையலறைக்கு இழுத்துக் கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் பெரும் முயற்சியால் அந்த சுறா கறியாக்கப்பட்டது.

மூளை இல்லாமல் தவளையின் முகத்தோற்றத்துடன் பிறந்த குழந்தை…..!!

நைஜீரியாவில் லைன் எகிட்டி பொது மருத்துவமனையில் பிரசவத்துக்காக நடுத்தர வயது தாயொருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு மூளை இல்லாமல் தவளையின் முகத்தோற்றத்துடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்தத் தகவலை மருத்துவமனை நிர்வாக இயக்குனர் Dr.வோல் ஒலுகோஜி உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் அவர் இது குறித்து கூறுகையில்…..இவருக்கு பிரசவம் தாமதமானது. அதனால் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டது. பிறக்கும் போது அந்த குழந்தை மூளை இல்லாமல் பிறந்துள்ளது. அத்துடன் தலையில் மூளைக்குப் பதிலாக குழி காணப்பட்டதாக அவர் கூறினார்.
இந்தக் குழந்தை கருவில் உருவாகும் போதே மூளை உருவாகவில்லை என நிபுணர்கள்

வளையல்களை கையில் போடுவதற்கு இடமில்லாமல் கழுத்தில் மாலையாக போட்ட மணப்பெண்…!!!!

சீனாவில் அண்மையில் செல்வந்த பெண்ணொருவருக்கு திருமணம் நடைபெற்றது. இத் திருமணத்தின் போது அந்த மணப்பெண் தன்னிடம் இருந்த பெருந் தொகையான தங்க நகைகளை அணிந்துள்ளார்.

அப்போது தங்க வளையல்களை கையில் போடுவதற்கு இடமின்றி அவற்றை தங்க சங்கிலியில் கோர்த்து மாலையாக அணிந்திருந்தார்.

நாளுக்கு நாள் தங்க நகைகளின் விலை கூடிக் கொண்டு போகிறது. பலருக்கு தங்க நகைகள் அணிவதே எட்டாக் கனியாகி விட்டது. ஆனால் இந்த மணப் பெண்ணோ நகைகளை போடுவதற்கு இடமில்லாமல் தவிக்கிறார்.

வேற்றுக்கிரகத்தில் இருந்து பூமியை வந்தடைந்த பனிக் கோளம்..!!!!

செக் குடியரசு நாட்டில் மில்லொவைஸ் காட்டில் சேற்றுப்பகுதியில் பனிக் கோளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல கோடுகளுடன் இந்த பனிக் கோளம் காணப்படுகிறது.

அத்துடன் இந்த பனிக் கோளம் நீண்ட நேரத்துக்கு உருகாமல் அப்படியே உள்ளது.UFO (unidentified flying object) இதனை ஆராட்சி செய்துள்ளது. இந்த ஆராட்சி முடிவுகளின் படி இந்த பனிக் கோளம் பூமிக்கு சொந்தமானது இல்லை எனத் தெரியவந்துள்ளது. அத்துடன் இது விண்வெளிக்கு அப்பால் இருந்து பூமியில் விழுந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

உலகின் சிறிய அசையும் படிக்கட்டு – வீடியோ இணைப்பு..!!!!!

உலகிலேயே சிறிய அசையும் படிக்கட்டை உருவாக்கியுள்ளனர். இதனை கவசாகி நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த அசையும் படிக்கட்டு யப்பானில் உள்ள ஓர் அங்காடியில் பொருத்தப்படுள்ளது.
இந்த அசையும் படிக்கட்டானது வெறும் ஐந்து படிக்கட்டுக்களை மட்டுமே கொண்டுள்ளது. இவ் அசையும் படிக்கட்டு கால் வலு குறைந்தவர்களின் பயன்பாட்டுக்கு பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அசையும் படிக்கட்டானது உலகிலேயே சிறிய அசையும் படிக்கட்டு என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.