வியாழன், அக்டோபர் 20

புற்றுநோய் நோயாளிகள் தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அவசியம்!!!

புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கும் நோயாளிகள் வாரம் 2 மணி நேரம் கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என ஆய்வு அறிவுறுத்துகிறது.உடற்பயிற்சி செய்வதால் புற்றுநோய் பாதிப்பு குறைகிறது. சிகிச்சையால் ஏற்படும் பக்கவிளைவுகளும் குறைகின்றன என்று மாக்மில்லன் புற்றுநோய் ஆதரவு அறக்கட்டளை ஆய்வு கூறுகிறது.
புற்றுநோய் பாதித்த முதியோரும், புற்றுநோயில் மீண்டவர்களும் வாரத்திற்கு 150 நிமிடம் மிதமான தீவிரத்தை கொண்ட உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. மாக்மில்லன் அறிக்கைப்படி பிரிட்டனில் 20 லட்சம் புற்றுநோயாளிகள் உள்ளனர்.
இதில் 16 லட்சம் பேர் தீவிரமாக உடற்பயிற்சி செயல்பாடு இல்லாதவர்களாக உள்ளனர். பலவிதமான புற்றுநோய் சிகிச்சைக்கு முன்னரும் சிகிச்சைக்கு பின்னரும் உடற்பயிற்சி அவசியம் என விளையாட்டு மருத்துவத்திற்கான அமெரிக்க கல்லூரியும் வலியுறுத்துகிறது.
இதன் பரிந்துரையும் மாக்மில்லன் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. உடற்பயிற்சி மேற்கொள்வதால் புற்றுநோய் சிகிச்சைக்கு பின்னர் சோர்வை தராது, புத்துணர்ச்சியை தரும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
புற்றுநோயில் வேகமாக மீள்வதற்கு உடற்பயிற்சி அவசியம் என மாக்மில்லன் புற்றுநோய் தலைமை நிர்வாகி கிளாரன் தேவனே கூறுகிறார்.

கருத்துகள் இல்லை: