வெள்ளி, ஆகஸ்ட் 26

இருதய மாற்று அறுவை சிகிச்சைகளின் போது பயன்படும் தேள்களின் கொடுக்குகள் ....

தேள் கொடுக்ககளிலிருந்து பெறப்படும் பதார்த்தங்களை இருதய மாற்று அறுவை சிகிச்சைகளின் போது பயன்படுத்த முடியும். இருதய மாற்று அறுவைச் சிகிச்சைகள் தோல்வியடையாமல் இருப்பதற்காக தேளின் கொடுக்குகளில் இருந்து பெறப்படும் ஒரு பொருளை மருத்துவர்கள் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய அமெரிக்க காடுகளில் உள்ள தேள் வகையொன்றின் தொடுக்கிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பதார்த்தம் இருதய மாற்று அறுவைச் சிகிச்சைகளின் போது மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.


மத்திய அமெரிக்க காடுகளில் காணப்படும் தேள் வகைகள் 5 முதல் 8 சென்றி மீற்றர் வரையில் வளரும். தேள்களின் ஆயுட்காலம் 4 முதல் 25 ஆண்டுகள் ஆகும்.

இருதய மாற்று அறுவை சிகிச்சைகளின் போது இரத்த கலன்கள் மற்றும் திசுக்களில் பாரிய பதிப்புக்கள் ஏற்படும். இத் தேள் வகையிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் பதார்த்தம் இதற்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: