வெள்ளி, ஆகஸ்ட் 26

உலகின் குள்ளமான மனிதராக பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பலாவிங் சாதனை...

உலகின் குள்ளமான மனிதர் என்ற பட்டத்தை பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பலாவிங் என்பவர் பெற்றுள்ளார். பிலிப்பைன்ஸின் மிண்டானோ என்ற தென் பகுதியில் இவர் வசித்து வருகிறார்.
இவரை பற்றி அறிந்த கின்னஸ் குழு இவர் இருக்கும் இடத்துக்கு நேரே சென்றது. அனைவரும் பலாவிங்கை பார்த்து வியந்து விட்டனர். இவரது உயரம் 59.93 செ.மீ தான்.
இவர் ஞாயிற்றுக்கிழமை தான் தனது 18 வது பிறந்த நாளை கொண்டாடினார். நேற்றே உடனடியாக பலாவிங்கை உலகின் மிக குள்ளமான மனிதனாக அறிவித்தது கின்னஸ் கமிட்டி.
இதுவரையில் உலகின் குள்ளமான மனிதராக இருந்தவர் நேபாளத்தை சேர்ந்த கஜேந்திர தபா மகர் என்பவர். இவரின் உயரம் 67 செ.மீ. இந் நிலையில் இவரது இந்த சாதனையை முறியடித்துள்ளார் பலாவிங்.





கருத்துகள் இல்லை: